மதசார்பற்ற கட்சிகளுக்கு நல்லகண்ணு அழைப்பு, மதவாத சக்தியை வீழ்த்த ஒன்றிணைவோம்
மதவாத சக்தியை வீழ்த்த ஒன்றிணைவோம் என்று மதசார்பற்ற கட்சிகளுக்கு நல்லகண்ணு அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி: மதவாத சக்தியை வீழ்த்த நாங்கள் ஒன்று சேந்திருக்கிறோம். இந்த அணி வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் மத்திய அரசை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் இருப்பது பாராட்டத்தக்கது.
திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறது. மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அணி சேர்ந்திருக்கிறோம். இந்த அணி வெற்றிபெற அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
மத்திய அரசு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. பாஜகவின் கொள்கைகள் நாட்டை பின்னோக்கி கொண்டுபோகக் கூடியது. இதை அனைத்து ஜனநாயக மதசார்பற்ற இடதுசாரி கட்சிகள் ஒன்றினைந்து எதிர்த்து மத்திய அரசி வீழ்த்த வேண்டும்" என்று நல்லகண்ணு அறைகூவல் விடுத்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications