கொடைரோடு சுங்கச்சாவடி கண்ணாடி, தடுப்புகளை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர் அதிரடி கைது
சுங்கசாவடியை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கொடைரோடு சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சியினர் 44 பேரை குண்டுகட்டாக போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரியும் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியை நாம் தமிழர் கட்சியினர் 40-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போராட்டக்காரர்கள் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் தடுத்து நிறுத்திய போலீசாரையும் மீறி, சுங்கச்சாவடி மையத்திற்குள் புகுந்து அங்கிருந்த கண்ணாடி மற்றும் தடுப்புகளை அடித்து நொறுக்கினர்.
சுங்கச்சாவடிகளின்றி, அனைத்து வாகனங்களும் கட்டணமில்லாமல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என்றும் ஆவேசமாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரையும் போலீசார் குண்டுகட்டாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தது. இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications