சிட்டிங் எம்எல்ஏக்கள், சீனியர் எம்பி.... நாமக்கல் அதிமுக வேட்பாளர்கள் பயோடேட்டா

Subscribe to Oneindia Tamil

பி. தங்கமணி

குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான பி. தங்கமணி (வயது 56) நிறுத்தப்பட்டுள்ளார். 2006- தேர்தலில் திருச்செங்கோட்டிலும் 2011-ல் குமாரபாளையத்திலும் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

கே.பி.பி. பாஸ்கர்

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. கே.பி.பி. பாஸ்கர் (வயது 46) மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். சுமார் 16 ஆண்டுகாலம் நாமக்கல் நகர அதிமுக செயலராக பதவி வகித்தார்.

ஆர்.ஆர். ராஜேந்திரன்

பரமத்தி வேலூர் தொஜுதி அதிமுக வேட்பாளராக ஆர்.ஆர். ராஜேந்திரன் (வயது 51) அறிவிக்கப்பட்டுள்ளார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராஜலிங்கம் 1972-ம் ஆண்டு முதல் 1998 வரை 26 ஆண்டுகாலம் கபிலர்மலை ஒன்றிய அதிமுக செயலராக இருந்தவர். தற்போது கபிலர்மலை ஒன்றிய குழு தலைவராக இருக்கிறார் ராஜேந்திரன்.

பொன். சரஸ்வதி

திருச்செங்கோடு தொகுதி அதிமுக வேட்பாளராக பொன். சரஸ்வதி (வயது 55) நிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகாலமாக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

சரோஜா

ராசிபுரம்(தனி) தொகுதியில் மாஜி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யான டாக்டர் சரோஜா (வயது 68) நிறுத்தப்பட்டுள்ளார். 1991-ல் சங்ககிரி தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். 1998, 1999-ல் ராசிபுரம் லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக லோக்சபா தலைவராகவும் இருந்தவர்.

சந்திரசேகரன்

சேந்தமங்கலம் (தனி) தொகுதிக்கு சிட்டிங் எம்எல்.ஏ சந்திரசேகரன் (வயது 50) நிறுத்தப்பட்டுள்ளார். 1996-ல் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். பின்னர் 2007-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தற்போது சேந்தமங்கலம் சட்டசபை அதிமுக செயலராக இருக்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+