தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரித்த ஜல்லி, மண் விலை.. வீடு கட்டுவோர் புலம்பல்.. கான்ட்ராக்டர்கள் மனு
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்களின் விலைகளை யூனிட் ஒன்றிற்கு ரூ.1000 ம் திடீரென மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஸர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் உயர்த்தியதால் பில்டர்ஸ் அசோசியேசன் சங்கத்தினர், அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விலையேற்றத்தால் அரசு கட்டிட கட்டுமாப பணிகள் பாதிக்கப்படும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர்b உமாவிடம் மாவட்ட பில்டர்ஸ் அசோசியேசன் சங்கம், அரசு ஒப்பந்ததார்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பில்டர்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் பி.எஸ்.டி தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட்டின் விலைகள் குறித்து கல்குவாரி மற்றும் கிரஸ்ர் உரிமையாளர்கள் சங்கத்தினர் எங்களிடம் கலந்தாலோசிக்காமல் 40 % விலையை திடீரென உயர்த்திள்ளனர். அதன்படி ஒரு யுனிட்க்கு 1000 உயர்த்தி 4 ஆயிரமாக அறிவித்துள்ளனர்.
திடீரென ஜல்லி, எம்.சாண்ட் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு கட்டிடங்களின் கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, ஜல்லி, எம்.சாண்ட்களின் விலையை மார்ச் மாதம் வரை உயர்த்த கூடாது.
நாமக்கல், சேலம் திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஆட்சியரிம் மனு அளித்துள்ளோம், அவர் தனது தலைமையில் அனைத்து சங்கத்தினரையும் அழைத்து கூட்டம் நடத்தி விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். விலையேற்றத்தௌ குறைக்காவிட்டால் வேலை நிறுத்ததை தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications