புறா பிடிக்கப் போய் விபரீதம் – இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலி
நாமக்கல்: புறா பிடிக்கப்போன இடத்தில் இரண்டு சிறுவர்கள் கிணற்றில் விழுந்து பலியாகிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகிலுள்ள பெரியக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான முருகேசன் மகன் பிரவீன்குமார் , அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் இராஜசேகர் . இவர்களில், பிரவீன் குமார் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். ராஜசேகர் பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ளார்.
நெருங்கிய நண்பர்களான இருவரும் புதன்கிழமை நடைபெற்ற உள்ளூர் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு, நள்ளிரவில் செங்காடு பகுதியில் உள்ள விவசாயி கந்தசாமியின் என்பவரின் தோட்டத்தில் வளர்த்து வரும் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
புறாக்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, புறாக்களின் சப்தம் கேட்டு விவசாயி கந்தசாமி எழுந்து வந்து வீட்டுக்கு முன்னிருந்த மின்விளக்கு போட்டுள்ளார்.
இதனால் புறா பிடிக்கும் முயற்சியை கைவிட்ட மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அப்போது, அருகில் உள்ள சின்னத்தம்பி என்பவரின் தோட்டத்தில் இருந்த விவசாய கிணற்றில் இருவரும் தவறி விழுந்தனர்.
அப்போது, சுவரில் மோதியும், உள்ளே இருந்த மோட்டாரில் அடிபட்டும் பலத்த காயமடைந்த மாணவர்கள் இருவரும் கிணற்று நீரில் மூழ்கி இறந்தனர்.
இதுகுறித்து அந்தப் பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில், இராசிபுரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று இருவர் சடலத்தையும் மீட்டனர். இது குறித்து ஆயில்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications