நாமக்கல்: தலித் மாணவனின் கையால் மலம் அள்ளச் சொன்ன ஆசிரியை கைது
நாமக்கல்: சாதிகள் இல்லையடிப்பாப்பா என்று பாரதியின் பாடலை சொல்லிக்கொடுத்தாலும்... சாதிக்கொடுமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தலித் மாணவனை கையால் மலம் அள்ள வைத்த நாமக்கல் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட ராமாபுரம்புதூர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி மகன் 7 வயதான சசிதரன். நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 12ம் தேதியன்று வியாழக்கிழமை இன்னொரு மாணவர் வகுப்பறையில் மலம் கழித்துவிட்டார். அதைப் பார்த்த வகுப்பாசிரியை விஜயலட்சுமி மாணவர் சசிதரனை கையால் அந்த மலத்தை அள்ள வைத்துள்ளார்.
மாணவன் சசிதரனும் ஆசிரியைக்கு பயந்து கையில் அதை அள்ளி ஜன்னல் வழியா போட்டுள்ளான்.
மாலையில் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லி அழுததோடு மறுநாள் பள்ளி செல்ல மறுத்துவிட்டான். வெள்ளிக்கிழமையன்று பள்ளி திறந்ததும் பெற்றோர்கள் இருவரும் விஜயலட்சுமி டீச்சரிடம் சென்று கேட்டபோது அதற்கு அந்த ஆசிரியை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.
விஜயலட்சுமி ஆசிரியை அந்தப் பகுதியின் செல்வாக்கு உள்ள ஜாதியை சேர்ந்தவராம். ஆசிரியையைக் கண்டித்து சிறுவனின் பெற்றோரும், உறவினர்களும் முற்றுகையிடவே தகவலறிந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன், மாலதி ஆகியோர் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட ஆசிரியையை இட மாற்றம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில், குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழைத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை கேட்ட அதிகாரிகள் இரண்டு நாள்களில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்றனர்.
ஆனாலும் அந்த ஆசிரியை அசராமல் மாணவனுக்கு டிசி கொடுக்கக் கூறவே, சசிதரனின் தந்தை வீராசாமி நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பள்ளிக்கு நேரடியாகச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார், டி.எஸ்.பி. மனோகரன், கோட்டாட்சியர் எம்.கண்ணன் ஆகியோர் ஆசிரியை மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர்.
நடந்த சம்பவம் உண்மை என்பது தெரியவரவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை விஜயலட்சுமியை நாமக்கல் போலீஸார் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.
அவர் மீது அரசியலமைப்புச் சட்டம் 310ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியை விஜயலட்சுமியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அல்லிமுத்து உத்தரவிட்டார்.
தலித் மாணவனின் கையால் மனிதக்கழிவை அள்ளச் சொன்னச் சம்பவமும் அதற்கு காரணமான ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவமும்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications