உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்"... ஸ்டாலின் சொன்ன பழமொழி
சென்னை: "உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்" என்று நம்ம ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். அது போல உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க அனுமதி கொடுக்காத இந்த ஆட்சி, தனியாக உலக முதலீட்டு மாநாடு சென்னையில் நடத்தியது. 200 கோடி ருபாய் செலவு செய்து விளம்பரத்திற்காக நடத்தப்பட்டது என்று மென்பொறியாளர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் ஜெயலலிதா அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
நமக்கு நாமே பயணத்தின் ஒரு கட்டமாக மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமையன்று சோழிங்கநல்லூரில் இருபத்தி இரண்டு சாஃப்ட்வேர் நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், கடந்த வருட மழையை எதிர்பாராத மழை என்று சொல்ல முடியாது. பருவ மழை தான். வெள்ளம் செயற்கையா இயற்கையா என்ற வாதம் இன்று வரை நடந்து வருகிறது. அதனால் நான்காம் கட்ட "நமக்கு நாமே" சந்திப்பை ஒத்தி வைத்தோம் என்றார்.
நமக்கு நாமே பயணத்தால் இந்தப் பெரிய சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடும் என்று தயங்கினோம். ஆனால் இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளோம் . வரும் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் 234 தொகுதிகளும் நிறைவு பெற்று விடும். எந்த அரசியல்வாதியும் இதைச் செய்யவில்லை என்கிற தற்பெருமை எனக்குண்டு என்று கூறினார் ஸ்டாலின்.

ஐ.சி.யூவில் உள்ளது
அதிமுக ஆட்சி பற்றி குற்றம் சாட்டிய ஸ்டாலின், ஆட்சி அல்ல, காட்சி. காட்சியும் அல்ல, காணொளிக் காட்சி.அ.தி.மு.க ஆட்சி, நடந்து-உட்கார்ந்து-படுத்து-இப்போது ஐ.சி.யூ. வார்டில் உள்ளது. செயல்பட முடியாத அரசாக. இனி எந்த அரசியல் பிரமுகராக இருந்தாலும், அவர்கள் தான் மக்களைத் தேடி வர வேண்டும் என்ற நிலை "நமக்கு நாமே" மூலமாய் நிறைவேற்றப் பட்டுள்ளது என்றார்.

பணி பாதுகாப்பு
ஸ்டாலினிடம் ஐ.டி நிறுவன ஊழியர்கள் தங்களின் குறைகளை தெரிவித்தனர். மழையில் பல ஐ.டி நிறுவனங்கள் மூழ்கிப் போயின. இதன் இழப்புகள் ஊழியர்களைத் தான் பாதிக்கும். இனிவரும் காலத்தில் உள் கட்டமைப்புகள் சீராக்கப் பட வேண்டும் என்பதில் இருந்து பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும், ஐ.டி வேலைகள் ஏன் பெரும்பங்கு தனியார் நிருவனங்களுக்கே செயல் படுகிறது? அரசும் வேலைகளை அதிகரிக்கலாமே, வேலைக்கு உத்திரவாதம் வேண்டும், வேலை பார்க்கும் பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர்.

மக்களை சந்திப்போம்
இனி தி.மு.க'வில் கவுன்சிலர்.எம்.பி, எம்.எல்.ஏ என யாராக இருந்தாலும் மக்களை சந்திக்கும் நிலை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அப்படி அவர்கள் சந்தித்தால் தான் வேலையில் இருக்க முடியும் என்ற அறிக்கையையும் விட உள்ளோம். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரான நான், கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரம் 1 அல்லது 2 முறை சென்று மக்களை பார்த்து வருகிறேன்.

ஸ்டிக்கர் ஒட்டினார்கள்
செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறந்து விட்டிருக்க வேண்டும். ஐ.டி ஊழியர்கள் வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்ப்பட்ட போது, முதல்வரோ அல்லது தகவல் தொழில்நுட்ப அமைச்சரோ, எவருமே உங்களை வந்துப் பார்க்க வில்லை. ஏனென்றால் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.

தகவல் தொழில் நுட்பத்தின் தந்தை
தமிழகத்தின் தொழில் நுட்பத் தந்தை என்று தி.மு.க'வைச் சொல்லலாம். 2000 ஆண்டில் டைடல் பார்க் தி.மு.க ஆட்சியில் தான் கட்டப்பட்டது. அதே போல், மதுரை, கோவை, திருச்சி, சேலம் என முக்கிய நகரங்களிலும் கட்ட நடவடிக்கை எடுத்தோம். அ.தி.மு.க'விற்கு தொலைநோக்கு இல்லாததால், தொழில் நுட்பம் பின்னோக்கிச் செல்கிறது. ஆனால் இந்தத் துறை அமைச்சர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

டாஸ்மாக் கடைகள்
இளைஞர்களின் சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தால் நம் மாநிலம் மாறும். தமிழகத்தை வேலை தேடும் மாநிலமாக அல்லாமல், வேலை கொடுக்கும் மாநிலமாக மாற்ற வேண்டும். அவர்கள் ரோடு போடுகிறார்களோ இல்லையோ, தவறாமல் "டாஸ்மாக்" திறந்து வைத்து விடுவார்கள்.

ஜீரோ முதல்வர்
டெல்லி நிர்பயா சம்பவத்திற்கு பிறகு பெண்கள் பாதுகாப்பிற்காக முதலமைச்சர் "13 அம்ச திட்டம்" என ஒன்றை அறிவித்தார். அவர் அறிவிப்பதில் ஹீரோ. ஆனால் செயல் படுத்துவதில் ஜீரோ. 110 விதி அதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது. அதன் பிறகு தான் பெண்களுக்கு எதிராக 21000 குற்றங்களும், 4769 கற்பழிப்புகளும் தமிழகத்தில் நடந்தன. சுய தொழில் செய்ய முயல்வோர் முதலமைச்சரைப் பார்க்க முடிவதில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார்.

வேலை இழப்பு
அமெரிக்காவின் சிலிக்கான் வேலிக்கு இந்தியாவில் இருந்து 7 மாநில முதல்வர்கள் சென்றார்கள். ஆனால் நம் முதல்வர் செல்லவில்லை. தலைமைச் செயலகம் வர, பொதுக் குழு என கட்-அவுட் வைப்பதிலேயே நேரம் ஓடி விடுகிறது. இருக்கும் தொழிற்சாலைகளும் வெளியே நகர்கின்றன. நோக்கியா, ஃபாக்ஸ்கான் முதலான நிறுவனங்கள் கடையை மூடிவிட்டு சென்று விட்டார்கள். இதனால் 75,000 பேர் வேலை இழந்து போனார்கள்.

எல்லாம் ஒரு விளம்பரம்
நான்கு ஆண்டுகளாக, சட்டமன்றத்திடமும், வெளியிலும் 33 எம்.ஓ.யூ கையெழுத்திட்டுள்ளோம். 31 ஆயிரம் கோடி ருபாய் முதலீடு வந்து விட்டது என்று சொல்கிறார்களே தவிர, எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்று கேட்டால், அவர்கள் சொல்ல மறுக்கின்றனர். ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
"உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்" என்று. உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு தொழில் தொடங்க அனுமதி கொடுக்காத இந்த ஆட்சி, தனியாக உலக முதலீட்டு மாநாடு சென்னையில் நடத்தியது. 200 கோடி ருபாய் செலவு செய்து விளம்பரத்திற்காக நடத்தப்பட்டது தான் அது.

நம்பர் ஐதீகம்
முதல் நாள் தொடங்கி வைத்த போது, 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரப் போகிறது என்றும் இரண்டாவது நாள் 2.42 லட்ச கோடி ரூபாய் வந்து விட்டது என்றனர் ! அதென்ன கால்,அரை,முக்கால் இல்லாமல், 2.42 ? என்று கேட்டால், அதில் ஒரு சூட்சமம் இருக்கிறது. முதலமைச்சரின் பிறந்தநாள் 2ஆம் மாதம் 24ஆம் நாள். எனவே 24.2 என்ற தேதியை 2.42 லட்சம் என மாற்றி விட்டார்கள். இது வேடிக்கை அல்ல. அவருக்கு ஐதீகப் படி, வாஸ்து சாஸ்திரம் எல்லாம் பார்த்து சொல்லி இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே இது என்றார்

இனி தவறுகள் நடக்காது
மாநிலத்தின் எதிர்காலம் தகவல் தொழில்நுட்பத்தின் கையில் தான் உள்ளது. நாங்கள் கலெக்க்ஷன்,கரப்ஷன்,கமிஷன் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவோம். இனிமேல் தவறுகள் நடக்காது.தி.மு.க'வின் வாக்குறுதி அழுத்தம் திருத்தமாகத் தான் இருக்கும். எங்கள் கடமையை ஆற்றுவோம்!" என்று கூறி முடித்தார் ஸ்டாலின்.

டேக் எ செல்ஃபி
ஜீன்ஸ் டிசர்ட் என்று கேசுவலாக வலம் வந்த ஸ்டாலின் ஐ.டி துறை பணியாளர்களை சந்தித்த போது கோட் சூட் என பார்மலாக பங்கேற்றார். ஊழியர்களுடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் ஸ்டாலின்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications