அம்மா வெற்றி.... திருப்பதி போய் நன்றி சொன்ன நமீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதற்காக திருப்பதி திருமலைக்குச் சென்று ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தினார் நடிகை நமீதா.

நடிகை நமீதா சமீபத்தில்தான் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடவில்லை என்றாலும், அவ்வப்போது மீடியாவில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசி வந்தார்.

Namitha's Thanks Giving visit to Tirumala

தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது அவர் திருமலைக்குச் சென்று ஏழுமலையான தரிசித்தார். தரிசனம் முடிந்து வெளியில் வந்த அவர், அதிமுகவின் வெற்றிக்காவும் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவும் பிரார்த்தனை செய்ததாகக் கூறினார்.

Namitha's Thanks Giving visit to Tirumala

இப்போது அதிமுக தேர்தலில் வென்று, முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். தனது பிரார்த்தனை நிறைவேறியதற்காக நேற்று திருமலைக்குச் சென்ற நமீதா, ஏழுமலையானுக்கு நன்றி செலுத்தினார்.

Namitha's Thanks Giving visit to Tirumala

இதுகுறித்து அவர் கூறுகையில், "நல்ல பிரார்த்தனைகளைக் கடவுள் எப்போதும் நிறைவேற்றித் தந்துவிடுகிறார். அம்மா மீண்டும் முதல்வராகியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. அம்மாவின் ஆட்சியில் தமிழகம் மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மாதான்," என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Namitha has visited Tirupathi Tirumala and thanked God Elumalaiyan for ADMK's victory
Please Wait while comments are loading...