மிசஸ் நமீதாவை வாழ்த்திய பிக்பாஸ் குடும்பம்... ஜூலி எங்கேப்பா??
நமீதா திருமணத்தில் பிக்பாஸ் தமிழ் குடும்பத்தினர் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.
Recommended Video

திருப்பதி: மச்சான்ஸ் நமீதா திருமதி நமீதாவாகிவிட்டார். திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க நமீதாவிற்கு வீரேந்திர சவுத்ரி தாலி கட்டினார். மிசஸ் நமீதாவை பிக்பாஸ் குடும்பத்தினர் வாழ்த்தினர்.
விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. சத்யராஜ் உடன் சில படங்களில் நடித்தார். ஒல்லியாக இருந்த நமீதா திடீரென குண்டாகி கவர்ச்சி வேடங்களில் நடித்தார்.
கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மச்சான் என்று போட்டியாளர்களை அழைப்பது பிரபலமானது. மச்சான் நடிகை என்றே அழைத்தனர்.

பிக்பாஸ் சர்ச்சை
விளம்பரப்படங்களிலும் நடித்தார் நமீதா. பல ஆண்டுகளாகவே பட வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் சர்ச்சைக்குரிய கருத்தினை பதிவிட்டார்.

நமீதாவின் காதலர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தில் நமீதா பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நமீதாவிற்கு திருமணம் என்ற அறிவிப்பு வெளியானது. அவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது.

திருப்பதியில் திருமணம்
நேற்று நமீதா வீரேந்திர சவுத்ரிக்கு இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. காலையில் நடந்த திருமண சடங்கில் நீல நிற ஆடையில் ஜொலித்தார் நமீதா.

தம்பதியர் உற்சாகம்
இன்று காலையில் நமீதா வீரேந்திர சவுத்ரி இடையே திருமண சடங்குகள் நடந்தன. பட்டுப்புடவையில் அலங்காரமாய் ஜொலித்தார் நமீதா. வேத மந்திரங்கள் முழங்க நமீதா கழுத்தில் தாலி கட்டினார் வீரேந்திர சவுத்ரி.

பிக்பாஸ் குடும்பம்
மிசஸ் நமீதாவை அவரது நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்தினர். பிக்பாஸ் குடும்பத்தைச் சேர்ந்த சக்தி, காயத்தி, கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர். ராதிகா, சரத்குமார் ஆகியோரும் மிசஸ் நமீதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications