தேமுதிக + காங்கிரஸ் + திமுக இணைந்தால்... "நம்ம அடையாளம்" சர்வே சொல்லும் "நம்பர்" இடிக்குதே??
சென்னை: தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை திமுக சந்தித்தால் அக்கட்சிக்கு 201 இடங்கள் கிடைக்கும் என்று நம்ம அடையாளம் இதழின் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவர்கள் சொல்லும் கணக்குப் படி பார்த்தால் இடங்கள் வரவில்லை.
இவர்களின் கருத்துக்கணிப்புப்படி பார்த்தால், திமுக தனித்துப் போட்டியிட முடிவு செய்தால் அந்தக் கட்சிக்கு 112 இடங்கள் கிடைக்குமாம்.
சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தற்போதைய வாக்காளர்கள் மன நிலை, யாருக்கு எத்தனை சீட் கிடைக்கலாம், கூட்டணி எப்படி அமைந்தால் எப்படி சீட் கிடைக்கும் என்பது குறித்த கருத்துக் கணிப்பை நம்ம அடையாளம் வெளியிட்டுள்ளது.
அதிலிருந்து...

தனித்து நின்றால் 112
திமுக வரும் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தால் அந்தக் கட்சிக்கு 112 இடங்கள் கிடைக்கும். அதாவது மெஜாரிட்டிக்கு 6 சீட் குறைவாக வெற்றி கிடைக்கும்.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால்
காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்தால் அக்கட்சிக்கு 133 சீட் கிடைக்கலாம்.

தேமுதிகவுடன் மட்டும் சேர்ந்தால்
அதேசமயம், தேமுதிகவுடன் மட்டும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதாக இருந்தால் இக்கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கலாமாம்.

காங்., தேமுதிக இணைந்து வந்தால்
ஒரு வேளை திமுகவுடன், காங்கிரஸும், தேமுதிகவும், ஒரு முஸ்லீ்ம் கட்சியும் இணைந்து வந்தால் 201 இடங்கள் கிடைக்கும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. ஆனால் நம்பரைக் கூட்டிப் பார்த்தால் அது இடிக்கிறது. 201 இடங்கள் வரவில்லை. இவர்களது கருத்துக் கணிப்பிலேயே நம்பர் இடிக்கிறது.

தேமுதிகவால் அதிக ஆதாயம்
தேமுதிகவுடன் திமுக கூட்டணி வைப்பதால் அதிக ஆதாயம் கிடைக்குமாம். அதாவது 40 தொகுதிகள், தேமுதிக புண்ணியத்தால் திமுகவுக்குக் கிடைக்குமாம்.

அந்த 40 தொகுதிகள்
வேளச்சேரி, உத்திரமேரூர், மதுராந்தகம், வாணியம்பாடி, அணைக்கட்டு, ஆற்காடு, கீழ் வைத்தினங்குப்பம், ஜோலார்ப்பேட்டை, அரியலூர், துறையூர், முசிறி, மணச்சநல்லூர், புவனகிரி, கடலூர், திட்டக்குடி, விருத்தாச்சலம், கலசப்பாக்கம், ஆரணி, போளூர், செய்யார், செங்கம், கிருஷ்ணகிரி, தளி, வால்பாறை, தொண்டாமுத்தூர், கள்ளக்குறிச்சி, வானூர், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், திண்டிவனம், செஞ்சி, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, எட்பாடி, வீரபாண்டி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு.

காங்கிரஸ் புண்ணியத்தால் கிடைக்கும் தொகுதிகள்
காங்கிரஸ் உதவியால் திமுகவுக்கு 21 தொகுதிகள் கிடைக்கலாமாம். அதாவது மயிலாப்பூர், தி.நகர், சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதவேநல்லூர், மணப்பாறை, விளாத்திகுளம், கோவை வடக்கு, பேராவூரணி, திருவையாறு, ஓரத்தநாடு, திண்டுக்கல், நத்தம், அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், அறந்தாங்கி, திருத்தணி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம்.

காங். தேமுதிகவால் கிடைக்கும் தொகுதிகள்
அதேசமயம், காங்கிரஸ், தேமுதிக கூட்டணியால் திமுகவுக்கு 27 தொகுதிகள் கூடுதலாக கிடைக்குமாம். அதாவது நிலக்கோட்டை, வேடசந்தூர், கிருஷ்ணராயபுரம், திருப்பத்தூர், பெண்ணாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, சீர்காழி, வேதாரண்யம், பூம்புகார், மயிலாடுதுறை, ஆலங்குடி, திருமயம், விராலிமலை, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, தாராபுரம், மடத்துக்குளம், பல்லடம், நாமக்கல், மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி.

அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காதாம்!
அதிமுகவுக்கு 20 மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் இந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இது மிகப் பெரிய அதிர்ச்சி செய்திதான் அதிமுகவுக்கு.

இந்த 20 மாவட்டங்களில்
அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டனம், கரூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியவையே அவை.

அதிமுகவுக்கு சாதகமாக 33 தொகுதிகளே
அதிமுகவுக்கு சாதகமாக மொத்தமே 33 தொகுதிகள்தான் உள்ளனவாம். ஆர்.கே நகர், ஸ்ரீரங்கம், பர்கூர், ஊத்தங்கரை, பொள்ளாச்சி, கவுண்டம்பாளையம், சூலுர், சிங்காநல்லூர், பாபநாசம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி நாயக்கனூர், பாலக்கோடு, அரூர், மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, உடுமலைப்பேட்டை, காங்கேயம், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், மேட்டூர், கங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், திருப்பரங்குன்றம்.

திமுகவுக்கு சாதகமான தொகுதிகள்
திமுகவுக்கு ஆதரவான தொகுதிகள்: கொளத்தூர், திருவல்லிக்கேணி, துறைமுகம், எழும்பூர், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், ராயபுரம், திருவிக நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம்.

தாம்பரம் - காஞ்சிபுரம்
தாம்பரம், செங்கல்பட்டு, பல்லாவரம், காஞ்சிபுரம், ஆலந்தூர், செய்யூர், சோழிங்கநல்லூர், திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, வேலூர், காட்பாடி, குடியாத்தம், திருப்பத்தூர், அரக்கோணம், ஆம்பூர்.

அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ஆலங்குளம், ராதாபுரம், திருநெல்வேலி, தென்காசி, நாங்குநேரி, ஜெயங்கொண்டம், குன்னம், பெரம்பலூர், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு.

லால்குடி
லால்குடி, விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், கோவில்பட்டி.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை, கீழ்ப்பெண்ணாத்தூர், வந்தவாசி, வேப்பனஹள்ளி, ஓசூர், மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகளத்தூர், திருவாடானை, திருவிடைமருதூர், கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, விழுப்புரம்.

திருக்கோவிலூர்
திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்ப்பேட்டை, மைலம், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, கம்பம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அரவக்குறிச்சி, கரூர், குளித்தலை, கூடலூர், குன்னூர், உதகமண்டலம், காரைக்குடி.

சிவகங்கை
சிவகங்கை, மானாமதுரை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டனம், கீழ்வேளூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அம்பத்தூர், மதுரவாயல், பூந்தமல்லி, ஆவடி, திருவொற்றியூர், மாதவரம், பவானிசாகர், அவினாசி, சங்கரி.












Click it and Unblock the Notifications