டீ ஸ்டாலை அடுத்து பாஜகவின் ‘நமோ’ மீன்கடை.. வஞ்சிரம் மீன், வவ்வால் மீனெல்லாம் விற்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மோடி பெயரில் மலிவு விலை மீன் கடைகளை தமிழக பாஜக மீனவர் அணி திறக்க உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி முழு வேகத்தில் தயாராகி வருகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை டீ விற்றவர் என காங்கிரசார் விமர்சனம் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நரேந்திர மோடி பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை இணைத்து ‘‘நமோ டீ ஸ்டால்'' அமைத்தனர். இதில் இலவசமாக டீ வழங்கப்பட்டது. தேர்தல் பிரசாரத்துக்கு இது பயன்படுகிறது.

நமோ மீன்கடை

நமோ மீன்கடை

இப்போது பாஜக மீனவர் அணியினர் மோடி பெயரில் ‘‘நமோ மீன்கடை'' அமைக்க முடிவு செய்துள்ளனர். இதில் மலிவு விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மீன்கடை

நடமாடும் மீன்கடை

நமோ மீன் கடை மலிவு விலையில் மீன்களை விற்கும் நடமாடும் மீன் கடையாகும். முதல் கட்டமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் தொடங்கப்படுகிறது.

மோடியின் படம்

மோடியின் படம்

இந்த நடமாடும் நமோ மீன் கடையில் மோடி படம் வைக்கப்பட்டு இருக்கும். மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து நமோ மலிவு விலை மீன்கடைகளை மற்ற மாவட்டங்களில் திறக்க திட்டமிட்டுள்ளனர்.

மலிவு விலையில்

மலிவு விலையில்

சென்னையில் மீன் விலையை கேட்டால் தலை சுற்றுகிறது. அரசு மீன் அங்காடிகளில் சுத்தம் செய்து துண்டு, துண்டாக வெட்டப்பட்ட வஞ்சரம் மீன் விலை கிலோ ரூ.950. நாங்கள் அதை ரூ.750-க்கு விற்பனை செய்ய இருக்கிறோம். என்று ‘‘நமோ மீன்கடை'' திறக்கப்படுவதன் அவசியம் குறித்து பா.ஜனதா மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

வீடு வீடாக மீன்கள்

வீடு வீடாக மீன்கள்

அடுத்த கட்டமாக வீடு வீடாக சென்று மீன்களை கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இது மீன் வியாபாரம் போல் தெரிந்தாலும் நரேந்திர மோடியின் பெயரையும், புகழை பரப்பும் தேர்தல் பிரசாரமாகவே இதை பயன்படுத்த இருக்கிறோம் என்று பாஜகவினர் கூறியுள்ளனர்.

கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம்

முதல் ‘நமோ மீன்கடை' வருகிற 25-ந் தேதி சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் திறக்கப்படுகிறது. பா.ஜனதாவின் மூத்த தலைவர் இல.கணேசன் இதை திறந்து வைக்கிறார்.

இலவச மீன்கள்

இலவச மீன்கள்

முதல் நாளில் 200 பேருக்கு, நமோ மீன்கடையில் இலவசமாக மீன் வழங்கப்படுகிறது. பின்னர், மலிவு விலையில் மீன்கள் விற்கப்படும். அடுத்த 15 நாட்களில் மேலும் 4 மாவட்டங்களில் இந்த கடை திறக்கப்படும் எனவும் பாஜக மீனவர் அணி தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+