தினகரன் தமிழகத்தின் சீனப் பெருஞ்சுவர்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
டிடிவி தினகரன் அணைக்க முடியாத நெருப்பு என அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் அணைக்க முடியாத நெருப்பு.. தாண்ட முடியாத அகழி.. தமிழகத்தின் சீனப் பெருஞ்சுவர் என அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளியுள்ளார். கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த டிடிவி தினகரனுக்கு மட்டும் தான் தகுதி உள்ளது என்றும் அவர் கூறினார்.
டிடிவி தினகரன் திஹார் சிறையில் இருந்து வந்ததும் வந்தார் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. எடப்பாடி தலைமையிலான அணி டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து நாள்தோறும் எம்எல்ஏக்களை வரவழைத்து சந்தித்து தனது ஆதரவையும் பலத்தையும் காட்டி மிரட்டி வருகிறார் டிடிவி தினகரன்.
அவரை சந்திக்கும் எம்எல்ஏக்கள் மறக்கமால் செய்தியாளர்களை சந்தித்து தினகரனின் புகழை பாடிவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளரும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் சென்னை பெசன்ட்நகர் வீட்டில் டிடிவி தினகரனை சந்தித்தார்.

தினகரன் கட்டுப்பாட்டில்..
இதைத்தொடர்நுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என்றார். டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் தான் கட்சி இருக்கிறது என்றார்.

தகுதியுடையவர் தினகரன்
சந்திக்காத எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவும் டிடிவி தினகரனுக்குத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் கட்சியையும் ஆட்சியையும் காக்க தகுதி வாய்ந்தவர் டிடிவி தினகரன் மட்டும் தான் என்றும் அவர் கூறினார்.

அணைக்க முடியாத நெருப்பு
கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த தினகரனுக்கு மட்டும் தான் தகுதி உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் டிடிவி தினகரன் அணைக்க முடியாத நெருப்பு.. தாண்ட முடியாத அகழி.. தமிழகத்தின் சீனப் பெருஞ்சுவர்.. தமிழர்களின் மானம் காக்கும் மதில் என புகழ்ந்து தள்ளினார்.

நன்றி மறந்தவர் ஜெயக்குமார்
மேலும் ஆட்சி கவிழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஜெயக்குமார் நன்றி மறந்து நாகரீகமில்லாமல் பேசுவதாகவும் நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டினார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
அண்ணாமலைதான் பெஸ்ட் சாய்ஸ்? 5 சால்வையில் அதிமுகவை முடித்த விஜய்? மூத்த பத்திரிகையாளர் அதிரடி! -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications