காலில் விழுந்து கேட்கிறேன்… அதிமுகவிற்கு ஓட்டுப் போடுங்க…: நாஞ்சில் சம்பத் கெஞ்சல்!

தஞ்சை லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமனை ஆதரித்து, நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
எதிர் அணியில் வாக்கு கேட்பவர்கள் யார் பிரதமர் என்று கூற முடியுமா? ஜெயலலிதா பிரதமரானால் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள கறுப்பு பணத்தை மீடடுக் கொண்டு வருவார்.
17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டதுண்டா? விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? மத்திய அரசின் தவறான கொள்கைகள் தானே? ஆனாலும் தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் மூலம் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்கி வருகிறது.
அம்மா உணவகங்கள் மூலம் அன்னதான புரட்சி செய்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக வேண்டும். 7 தமிழர்களின் மரண தண்டனையை ரத்து செய்த தமிழக முதல்வரின் சாதனையை தமிழ் உணர்வாளர்கள் பாராட்டுகின்றனர். ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் வற்புறுத்தி வருகிறார்.
அதேபோல, திருத்துறை பூண்டியில் அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. நாகை தொகுதி வேட்பாளர் டாக்டர் கோபாலுக்கு வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது:
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை அம்மா எனக்கூறி நடைபெறும் லோக்சபா தேர்தல் ஒரு குருசேத்திர யுத்தம். இதில் ஜெயலலிதாவுக்கு வாக்கு அளித்து 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.
இதுவரை இலங்கை ராணுவம் 600 தமிழக மீனவர்களை பிடித்து சென்றுள்ளது. மத்திய அரசு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கருணாநிதி என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இப்போது ஜெயிக்க முடியாது என்றார் நாஞ்சில் சம்பத்.
அவர் போகும் இடங்களில் இல்லாம் வாக்கு சேகரிக்கும் போது, அவர் கெஞ்சி கெஞ்சி வாக்காளர்களுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications