ஓ.பன்னீர்செல்வம் போராட்ட அறிவிப்பால் 'இவருக்கு' தூக்கமே போச்சாம்.. நாஞ்சில் சம்பத் கிண்டலை பாருங்க
ஊழலை எதிர்த்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்தை அறிவித்தது முதல் சேகர் ரெட்டி தூக்கமின்றி தவிப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் அறிவித்தது முதல் தொழிலதிபர் சேகர் ரெட்டி தூக்கமின்றி தவிப்பதாக நாஞ்சில் சம்பத் கிண்டலடித்துள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் டிடிவி. தினகரனை நாஞ்சில் சம்பத் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் ஓ. பன்னீர்செல்வம் ஆகஸ்ட் 10ம் தேதி அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்துள்ளது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சம்பத் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் அறிவித்தது முதல் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தூக்கம் போய்விட்டதாக குத்தலாக பதிலளித்தார்.

வேலூரைச் சேர்ந்த மணல் மாஃபியா சேகர்ரெட்டி அரசு அதிகாரிகள், அமைச்சர்களைக் கையில் வைத்துக் கொண்டு சட்டவிரோதமாக மணல் வெட்டி விற்பனை செய்து வந்தவர். இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் வைத்திருந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்.
சேகர்ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தலைவர் பதவி வாங்கிக் கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும், ஓ.பன்னீர்செல்வமும் சேகர் ரெட்டியும் நண்பர்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் ஓ.பிஎஸ் போராட்டம் குறித்து நாஞ்சில் சம்பத் இது போன்ற கருத்தை கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications