சசிகலாவுடன் நாஞ்சில் சம்பத் திடீர் சந்திப்பு! அதிமுகவுக்காக சுற்றுப் பயணம் செய்வதாக அறிவிப்பு!
அதிமுகவில் இருந்து விலகவில்லை என்றும் தான் சசிகலாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கருத்து கூறாமல் ஒதுங்கியிருந்தார். இதனால் அதிமுகவில் இருந்து விலகப் போவதாக செய்தி வெளியானது.
ஜெயலலிதா தனக்கு அளித்த இன்னோவா காரை அதிமுக அலுவலகத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து அவர் உறுதியாக அதிமுகவை விட்டு வெளியேறி விடுவார் என்று கூறப்பட்டது.

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தீவிர இலக்கிய பணியில் ஈடுபடப் போவதாகவும் பேட்டியளித்தார். அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சசிகலாவை தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
இந்த நிலையில் இன்று காலையில் போயஸ்தோட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார் நாஞ்சில் சம்பத். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தான் அதிமுகவில்தான் இன்னமும் தொடருவதாக கூறினார்.
சசிகலாவின் ஆணையை ஏற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாகவும் கூறிய நாஞ்சில் சம்பத்,தமிழகத்தின் மாண்பை காப்பாற்ற அதிமுகவில் நீடிப்பதாக கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications