நாஞ்சில் சம்பத் தாயார் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
சென்னை: அதிமுக முன்னாள் கொள்கைப் பரப்பு துணைச் செயலர் நாஞ்சில் சம்பத்தின் தாயார் கோமதி கடந்த சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 87. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நாஞ்சில் சம்பத் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மணக்காவிளையைச் சேர்ந்தவர் பாஸ்கர் பணிக்கர். இவரது மனைவி கோமதி. வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவாக இருந்த கோமதி சனிக்கிழமை பிற்பகலில் காலமானார். இவருக்கு கருணாநிதி, நாஞ்சில் சம்பத், ஜீவா, சீதாராமன், ஸ்டாலின், ஷீலா என 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

அம்மையாரின் இறுதிச் சடங்கு ஞாயிறன்று காலை 10 மணிக்கு மணக்காவிளையில் நடைபெற்றது.
நாஞ்சில் சம்பத் தாயாரின் மறைவிற்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
அ.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தின் தாயார் எம்.கோமதியம்மாள் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
தாயாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் நாஞ்சில் சம்பத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications