"தை பிறந்தால் வழி பிறக்கும்".. நாஞ்சில் சம்பத் சூசகம் !
சென்னை: அதிமுகவில் இருந்து தாம் விலகப்போவதாக வெளியான தகவலை அக்கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் நாஞ்சில் சம்பத் மறுத்துள்ளார். இருந்தாலும் அதிமுகவில் நிலைத்து இருப்பது குறித்து தெரியாது எனவும் கூறியுள்ளார்.
சன்நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாவது: நான் அதிமுகவில் தான் இருக்கிறேன். அதிமுக இயக்கத்தின் பிரச்சாரத்துக்காக எனக்கு வழங்கப்பட்ட கார் என்னிடத்தில் இருந்தது. 8 மாதங்களாக பிரச்சாரம் இல்லை. அதனால் காரை திரும்ப ஒப்படைத்துவிட்டேன்.

அதிமுகவில் தான் தற்போதும் இருக்கிறேன். இருந்தாலும் இனி இலக்கிய உலகத்தில் பணியாற்ற விரும்புகிறேன். அதிமுகவில் இருந்து நான் விலகுவதால் எந்த இழப்பும் வராது. சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என பாஜக விரும்புகிறது. எனவே தமிழகத்தில் நிலவும் இந்த சூழல் மூலம் ஏதாவது விபரீதம் செய்ய பாஜக முயற்சி செய்யலாம். அதை அதிமுக முறியடிக்க வேண்டும்.
தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனையை முதல்வர் பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர் கண்டிக்கவில்லை. பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை வர்தா புயலில் சிறப்பாக செயல்பட்டு சென்னையை மீட்டெடுத்து கொடுத்ததில் பெரும் பங்கு உண்டு.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் என்னுடைய இயல்புக்கு ஒத்துவராது. அதனால் இதுவரை அந்த பதவியை நான் விரும்பவில்லை. வைகோவுக்கு இனி அரசியல் வாழ்வே கிடையாது. மக்கள் நலக் கூட்டணி என்ற உருவாக்கி அதில் இருந்து விலகியதால் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்.
நான் இன்னும் அதிமுகவில் தான் இன்னுமும் நீடிக்கிறேன். நிலைப்பேனா என்று தெரியாது. பொது வாழ்க்கையில் இருந்தே விலக வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறேன். அதனால் என்ன முடிவு எடுப்பேன் என்று எனக்கே தெரியாது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் பண்பாட்டு மரபு. தனிக்கட்சி கூட தொடங்கலாம்.. அதனால் தை மாதம் வரை காத்திருக்கலாம் என நினைக்கிறேன். இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications