அதிமுகவில் நான் இணைய ஓபிஎஸ் தான் காரணம்: நாஞ்சில் சம்பத் பொளேர்
அதிமுகவில் நான் இணைய ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவில் நான் இணைய தற்போது முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம் என அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா அளித்த காரினை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தார்.

இது தொடர்பாக இன்று சன்நியூஸ் செய்தி தொலைக்காட்சிக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அதிமுகவில் தான் தற்போது வரை இருக்கிறேன். பதவி விலகுவதாக எந்த கடிதமும் கட்சிக்கு அனுப்பவில்லை. கட்சியும் என்னை நீக்குவதாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து அதிமுகவில் தான் நீடிப்பேன். தை பிறந்தால் வழி பிறக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
பொதுவாக அரசியல் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளேன். ஏற்கனவே 30 ஆண்டு காலம் பணியாற்றி விட்டேன். இனி பொதுவாழ்வு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். கல்லூரி பருவத்தில் இருந்து வைகோவால் ஈர்க்கப்பட்டதால் மதிமுகவில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் அந்த கட்சியில் இருந்து நான் விலகுவதற்கு எனக்கு எண்ணம் ஏதும் இருந்ததில்லை.
ஆனால் வைகோ என்னை கட்சியிலிருந்து நீக்க விரும்பினார். அதனால் அந்த முடிவை எடுத்தேன். அப்போது திமுகவில் இருந்தும் சிலர் என்னிடம் பேசினார்கள். தற்போது முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிமுகவில் இணைய கேட்டுக்கொண்டார். அதிமுகவில் இருந்து தொடர்ந்து வேண்டுகோள்கள் வந்தன. இதனால் 2012ல் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்துகொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications