'இன்னோவா சம்பத்' என்ற பழி வேண்டாம்- அதிமுகவிடம் காரை ஒப்படைத்துவிட்டேன்... நாஞ்சில் சம்பத் அதிரடி!
ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை அதிமுகவிடம் ஒப்படைத்துவிட்டார் நாஞ்சில் சம்பத். இதனால் அவர் விரைவில் கட்சி மாறக் கூடும் என தெரிகிறது.
சென்னை: சசிகலா தலைமையை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து வரும் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென தமக்கு ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் 2012-ம் ஆண்டு இணைந்தார் நாஞ்சில் சம்பத். அப்போது அவருக்கு இன்னோவா காரை பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா. இதனால் 'இன்னோவா சம்பத்' எனவும் அவர் விமர்சிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக தலைமையை ஏற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத் திமுகவுக்கு தாவுகிறார் எனக் கூறப்பட்டது. ஆனால் பட்டும் படாமலுமேயே இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் கருத்து கூறிவந்தார். இருந்தபோதும் சசிகலாவை மறைமுகமாகவே எதிர்த்து வந்தார்.

ஜெ. கொடுத்த கார்
இந்த நிலையில் இன்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது:
2012 டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்கள்.

பிரசாரத்துக்கு மட்டுமே
அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தை தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும்.

இன்னோவா சம்பத் பழி...
இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை, வீணாக அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

திமுகவுக்கு தாவல்?
நாஞ்சில் சம்பத் ஏற்கனவே திமுகவுக்கு தாவ உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. நாளை திமுக பொதுக்குழு கூடும் நிலையில் இன்று திடீரென இன்னோவா காரை திருப்பி கொடுத்திருப்பது அந்த யூகங்களை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications