அங்கிட்டு தினகரன் மீது பாய்ச்சல்.. இங்கிட்டு சசிகலாவுக்கு 40 மார்க்... நாஞ்சில் சம்பத் 'மெர்சல்'
தினகரன் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து கொண்டே சசிகலாவுக்கு 40 மார்க்கை அள்ளிக் கொடுத்துள்ளார் நாஞ்சில் சம்பத்.
Recommended Video

கன்னியாகுமரி: தினகரன் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து கொண்டே சசிகலாவுக்கு 40 மார்க்கை வாரி வழங்கியிருக்கிறார் அண்மையில் டிடிவி அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்.
டிடிவி தினகரன் தொடங்கிய அமைப்பின் பெயர் பிடிக்கவில்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத் அக்கட்சியிலிருந்து விலகினார். மேலும் அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் வழக்கமாக அடிக்கும் ஸ்டென்ட்தான் இது. அவர் விரைவில் வேறு கட்சியில் இணைந்து கொள்வார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலா தலைமையையேற்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு மறுநாளே சசிகலாவை ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசியவர்தானே இந்த நாஞ்சில் சம்பத். இதுபோன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கமல் பாஜகவின் தயாரிப்பு
இவற்றுக்கு நாஞ்சில் சம்பத் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், கமல், ரஜினியை நான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். அவர்கள் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை. கமல் கிட்ட என்ன இருக்கு. அவர் ஒரு பிஜேபி தயாரிப்பு. நான் நெருப்பு என்னை கரையான்கள் நெருங்க முடியாது. கொள்கைகளுக்காக வாழ்கிற சாதனை பறவை. பாஜகவுக்கு கால் இருந்தாதானே ஊன முடியும். அதெல்லாம் ஒரு அமைப்பா, அது ரத்தத்தை காவு கேட்கிற ஒரு கும்பல்.

அரசியல்வாதியாக பரிணமிக்க விரும்பவில்லை
இத்தனை நாட்கள் டிடிவி தினகரன் என்ற ஒரு சுமையை சுமந்து கொண்டுதான் இருந்தேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக சுமந்தேன். எடப்பாடிக்கு ஒன்றரை மார்க் கொடுக்கலாம். ஓபிஎஸ்ஸுக்கு அரை மார்க் கொடுக்கலாம். டிடிவி தினகரனுக்கு 10 மார்க் கொடுக்கலாம். சசிகலாவுக்கு 40 மார்க். அரசியல்வாதியாக பரிணாமிக்க விரும்பவில்லை.

வாகை சூட வாழ்த்துகள்
என்னை பொருத்தவரையில் அதிமுகவை வழி நடத்த தினகரனால் முடியும். தினகரன் வீட்டுக்கு அழைப்பில்லாமல் நான் ஏன் போய் நிற்கணும், நான் என்ன பொறம்போக்கா, பரதேசியா. அழைப்பும் மரியாதையும் இல்லாத இடத்தில் நான் நிற்கமாட்டேன். இந்த பேட்டியின் வாயிலாக தினகரனுக்கு நான் கூறுவதெல்லாம் இதுதான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை முன்னெடுத்து செல்லுங்கள். வாகை சூட என்னுடைய வாழ்த்துக்கள்.

எடப்பாடிக்கு மெசேஜ்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்துகட்சி தலைவர்களை சந்திப்பதற்கு பிரதமரிடம் நேரம் கேட்டு உடனடியாக முடிவெடுங்கள் என்று எடப்பாடிக்கு கூறிக் கொள்கிறேன் என்றார் நாஞ்சில் சம்பத். இனி தத்துவ அரசியலை மட்டுமே பேசுவேன் என்றும் கட்சி அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் கூறியுள்ள நாஞ்சில் அவரது நிலைப்பாட்டில் எத்தனை உறுதியுடன் இருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications