'அம்மா' உரையை கேட்பதற்காக வெயிலில் செத்து மடிய தயார்: நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேட்டி
சென்னை: ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட உரையை கேட்பதற்காக, வெயிலில் வெந்து மடிய நான் கூட தயார்தான் என்று அதிமுக கட்சியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி சானல் ஒன்றுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மழை வெள்ளத்தால் மக்கள் உயிரிழந்த நிலையில், ஆட்சியை தூக்கிப்பிடித்து, சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசி வந்ததால், அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஜனவரி மாதம் ஜெயலலிதாவால், நீக்கப்பட்டவர்தான் நாஞ்சில் சம்பத்.

சர்ச்சை
தற்போது அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பல பகுதிகளிலும் பேசி வருகிறார் சம்பத். தொலைக்காட்சி சானலுக்கு அளித்த பேட்டியிலும், ஜெயலலிதா பேச்சை கேட்பதற்காக வெயிலிலும் மடியலாம் என்ற பொருளில் அவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியிடவில்லை
நீங்கள் ஏன் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள நாஞ்சில் சம்பத், "என்னுடைய பாத்திரம் இதுதான். சட்டமன்ற உறுப்பினராகி, ஒரு சிமிழுக்குள் அடங்கியிருப்பது என்னால் முடியாது. ஆகவே இயல்பாகவே நான் விரும்பவில்லை. எனது பன்முக தன்மை இதனால் பாழ்பட்டுவிடும்.

பெயர் கெட்டுவிடும்
எம்.பி., எம்.எல்.ஏ ஆனால், நாஞ்சில் சம்பத் என்ற சொல்லுக்கு இருக்கும் மரியாதைக்கு, ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்" என்று தெரிவித்தார்.

ஷாக் பதில்
ஜெயலலிதா பொதுக்கூட்டத்திற்கு செல்லும் தொண்டர்கள் வெயில் கொடுமையால் உயிரிழப்பது குறித்து பாமக விமர்சனம் செய்துள்ளதே என்ற கேள்விக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பதில்தான் ஷாக் ரகம்.

பாமக மீது பாய்ச்சல்
நாஞ்சில் சம்பத் கூறியதாவது: "சித்ரா பவுர்ணமி அன்று, மாமல்லபுரத்தில், புகழ்பெற்ற வைணவ திருத்தலத்தின் உச்சியில் வன்னியர் சங்க கொடியை ஏற்றி, வடபுலத்தில் இருந்து வந்த ஒரு டிரைவர் உட்கார்ந்திருந்த நிலையில், அவர் மீது ஆசிட் பல்புகளை வீசி, 4 மாவட்டங்களில் மக்கள் இடம் பெயராத அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க செய்த மரம் வெட்டி தம்பிரான்கள், கீதா உபதேசம் செய்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.

சாகலாமே
அம்மாவின் பொதுக்கூட்டம் கேட்கப்போன இடத்தில், அந்த வெயிலில், வெந்து மடிவதற்கு நான்கூட தயாராக உள்ளேன்". இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications