தினகரனிடம் ஆடி காருக்கு அடிபோட்டேனா? யார் சொன்னது?... எல்லாம் பொய்: நாஞ்சில் சம்பத்
Recommended Video

கன்னியாகுமரி: இன்னோவா காரை கொடுத்ததே ஆடி காருக்கு அடி போடத்தான் என்று கூறுவது பொய் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் தொடங்கிய அமைப்பின் பெயர் பிடிக்கவில்லை என்று கூறிய நாஞ்சில் சம்பத் அக்கட்சியிலிருந்து விலகினார்.
இதுகுறித்து நாஞ்சில் சம்பத் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், மார்ச் 15-ஆம் தேதி தினகரன் அமைப்பை தொடங்கியுள்ளார். அதில் அண்ணாவும், திராவிடமும் தூக்கி எறியப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ளவில்லை
தத்துவத்தை மையமாக வைத்தவன்தான் தலைவன். ஆனால் இங்கு தத்துவமே தகராறாகிவிட்டதே. இதுகுறித்து நான் பேச முனைந்தபோதெல்லாம் அவர் என் போன் லைனுக்கு வரவே மாட்டார்.

அஅதிமுகனு வைத்திருக்கலாமே
அண்ணாவும் திராவிடமும் என்பது என் உள்ளத்தில் இருக்கிற ஒளி. அந்த ஒளியை மறைத்து வைத்துவிட்டு என்னை பேச சொன்னால் பேச்சாளராகிய என்னால் எதையும் பேச முடியாது. அம்மா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்திருக்கலாமே.

கோபம் இல்லை
டிடிவி தினகரனை விட்டு வெளியே வந்ததில் மகிழ்ச்சியாகதான் உள்ளேன். டிடிவி தினகரன் என்ற தனி மனிதன் மீது எனக்கு கோபம் இல்லை. அவர் தொடங்கிய அமைப்புதான் எனக்கு பிடிக்கவில்லை. என்னுடைய தத்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. திராவிடம் என்ற கான்செப்டை துணிச்சலாக எடுத்து விட்டனர்.

அருவருக்கத்தக்க கேள்வி
அதிமுகவும், டிடிவி தினகரன் அணியும் இணைந்தாலும் நான் செல்லமாட்டேன். கட்சி அரசியலுக்கே நான் முழுக்கு போட்டுவிட்டேன். நான் வேறு கட்சியில் சேர்ந்துவிடுவேன் என்று குரைப்பவர்கள் குரைக்கட்டும். நான் இனிமேல் யாரிடமும் சென்று நிற்கமாட்டேன். 100 சதவீதம் சுயமரியாதைக்காரன். என்னது ஓபிஎஸ்ஸை போய் பார்ப்பேனா என்று அருவருக்கத்தக்க கேள்வியை கேட்கிறீர்களே.

எந்த ஒரு கொடியும் வேண்டாம்
பேரை மாற்றுவார்களா என்று கேட்டு சொல்லுங்கள் , டிடிவி அணிக்கு போவதா வேண்டாமா என்பதை பார்த்து கொள்ளலாம். இன்னோவா காரை அவங்க கொடுத்தாங்க, நான் வாங்கிக் கொண்டேன். ஆடி காருக்கு அடி போடுகிறேன் என்று கூறுவதெல்லாம் பொய். கார் பயணமே சுமையானது , ரயில் பயணம்தான் எளிதானது. இனி ஒரு தலைவனை ஏற்றுக் கொள்கிற நிலையில் இல்லை. இனி ஒரு கொடியை ஏந்துகிற இடத்திலும் நான் இல்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications