காலமகளே! என் அண்ணனை காப்பாற்று.. சசிகலா கணவர் நடராஜனுக்காக நாஞ்சில் சம்பத் உருக்கம்
சசிகலா கணவர் நடராஜனுக்காக உருக்கமாக ட்வீட் பதிவை போட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
சென்னை: தினகரனை விட்டு வெளியே வந்துவிட்டாலும் நாஞ்சில் சம்பத் சசிகலா குடும்பத்துக்காக உருகிப் பேசுகிறார். சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடமாக இருப்பது குறித்து ட்விட்டரில் உருக்கமான பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார் நாஞ்சில் சம்பத்.
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவை ஏற்க மறுத்தார் நாஞ்சில் சம்பத். பின்னர் திடீரென சசிகலாவை சந்தித்து ஆதரவாளராக மாறினார்.

சசிகலா சிறைக்கு போன நிலையில் தினகரனின் அதிதீவிர ஆதரவாளராக இருந்தார். அண்மையில் தினகரன் அமைப்பு தொடங்கிய போது அண்ணா, திராவிடம் பெயர் இல்லை என கூறி வெளியேறுவதாக அறிவித்தார்.
ஆனாலும் அவர் அளித்து வரும் பேட்டிகளில், சசிகலாவை உயர்வாகத்தான் பேசி வருகிறார். இந்த நிலையில் சற்று முன்னர் ட்விட்டரில், சசிகலா கணவர் நடராஜனுக்கான உருக்கமான ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
தேளாகக் கொட்டியது ஒரு செய்தி. முந்துதமிழ் காக்க முந்திவந்தவன், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்டவன், தமிழ் ஈழ தாகம் கொண்டவன், தன்மானமுள்ள அண்ணன் ம.நடராஜன் கவலைக்கிடம்.கவலை என்னை கொத்தித் தின்னுகிறது . காலமகளே!உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று .
— Nanjil Sampath (@NanjilPSampath) March 19, 2018
அதில், தேளாகக் கொட்டியது ஒரு செய்தி. முந்துதமிழ் காக்க முந்திவந்தவன், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்டவன், தமிழ் ஈழ தாகம் கொண்டவன், தன்மானமுள்ள அண்ணன் ம.நடராஜன் கவலைக்கிடம்.கவலை என்னை கொத்தித் தின்னுகிறது . காலமகளே!உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று என பதிவிட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications