ராகுல் காந்தியை கைது செய்தது கண்டனத்துக்குரியது: புதுவை முதல்வர் நாராயணசாமி
டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை போலீசார் கைது செய்ததற்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிட நாராயணசாமி கூறியதாவது:

ஓய்வூதிய விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உறவினர்களை சந்திக்க விடாமல் ராகுல் காந்தியை டெல்லி போலீசார் கைது செய்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டெல்லியில் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் நேற்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications