கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்த நாராயணசாமி, திருமாவளவன்

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நாராயணசாமி, திருமாவளவன் விசாரித்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி இன்று விசாரித்தார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டு வருகிறது.

Narayanasamy enquires Karunanidhi health

அத்துடன் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். இன்று புதுவை முதல்வர் நாராயணசாமியும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதால் அவரை பார்க்கவில்லை. அவரது மகளும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.

கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற்று அரசியல் பணிக்கு திரும்புவார் என்றார்.

திருமாவளவன்

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடம் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடநலம் குறித்து விசாரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+