நம்புங்கள் நாராயணசாமியை... 2019ம் ஆண்டில் ராகுலை பிரதமராக்குவோம் என்கிறார்!
புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி மிகப் பெரிய சிம்ம சொப்பனமாக விளங்குகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. அவரை 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைத்து பிரதமராக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி பிறந்த நாள் நேற்று புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்வர் நாராயணசாமி 46 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், பிரதமர் மோடிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார் ராகுல் காந்தி. அவரை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வருகிற 2019ம் ஆண்டில் அவர் பிரதமராக நாம் பாடுபட வேண்டும்.

புதுவையில் கடந்த ஆட்சியாளர்களின் கோப்புகளைப் பார்த்தால் பல முறைகேடுகள் வெளிவருகின்றன. 10 ஆண்டுகளாக காரைக்கால் பக்கம் அவர்கள் செல்லவே இல்லை. காரைக்காலில் பல்வேறு துறைகளில் குளறுபடிகள் உள்ளன. அதனை எல்லாம் சரிசெய்ய வேண்டும்.
அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் பணியாற்றாத பட்சத்தில்தான் நான் தலையிடுவேன். அண்டை மாநிலத்தோடும் சுமுக உறவு வைக்க வேண்டும். தமிழகத்தில் ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதுபோல புதுவையிலும் வருகிற 6ம் தேதி வரை வழங்கப்படும் என காரைக்காலில் அமைச்சர் ஷாஜகான் அறிவித்துள்ளார். அந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications