சென்னையில் இன்று இரவு மோடி பிரசாரம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று இரவு சென்னையில் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
நரேந்திர மோடி தமிழகத்தில் ஏற்கெனவே திருச்சி, வண்டலூர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார். மூன்றாவது முறையாக இன்று தமிழகம் வருகை தருகிறார் மோடி.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரி வளாகத்தில் மாலை 6 மணிக்கு அவர் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவே குஜராத் திரும்புகிறார்.
இதைத் தொடர்ந்து பின்னர் 16ந் தேதி கோவை மற்றும் கிருஷ்ணகிரியில் மோடி பிரசாரம் செய்கிறார். 17-ந் தேதி ஈரோடு, சேலம் மற்றும் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்யும் மோடி கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
இந்த கூட்டங்களின் போது தமிழக பாஜக கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications