சென்னையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு சென்னையில் இன்று உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக இன்று சென்னை வருகை தந்தார் நரேந்திர மோடி. கர்நாடகத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு மாலை 5.45 மணிக்கு வந்தார் மோடி.

விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முரளிதர்ராவ், தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications