ஜெயலலிதா படத் திறப்பு மூலம் சட்டப்பேரவையில் பாஜக நுழைகிறது... அதிர்ச்சியில் கழகங்கள்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக சட்டப்பேரவையில் பாஜக நுழைவதில் வெற்றி பெற்றுள்ளது என்ற
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் பிரதமர் மோடி திறந்து வைக்கஉள்ளார். இதன்மூலம் பாஜகவின் சட்டமன்ற நுழைவு கனவு நிறைவேற போகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த ஒருவரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்கக் கூடாது என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பைக்காட்டிவந்தாலும் அதைப்பற்றி எல்லாம் தமிழக அரசும் மத்திய அரசும் கவலை கொள்ளவில்லை. மிக வேகமாக அதற்கான ஏற்பாடுகளில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். தமிழக முதல்வர், ஜெயலலிதா படத்தை பேரவையில் திறந்து வைப்பதில் தவறில்லை என்கிறார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் 'ஜெயலலிதா படத்தை பேரவையில் திறந்து வைப்பது தமிழகத்திற்கு பெருமை' என்று கூறியுள்ளார். பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜனும் மோடி வருவார், பேரவையில் ஜெயலலிதா படத்தைத் திறந்து வைப்பார் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் தாமரை பூக்குமா?
இந்தியா முழுக்க பாஜக தாமரை பூக்கவேண்டும் என்ற மோடி-அமித்ஷா கூட்டணியின் அரசியல் கனவு தமிழகத்தில் மட்டும் நிறைவேறாமல் போனது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கும் வீசிய மோடி அலை தமிழகத்தில் இரட்டை இலையிடம் செல்லுபடியாகாமல் கரைந்து போனது.

திட்டமிட்ட மோடி
தமிழகத்தில் தொகுதிக்கு 1000 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்ட பாஜக அதற்கு பரிகாரம் தேட முயற்சித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் நிகழ அதனை மிக சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்து திட்டமிட்டுக் காய்களை நகர்த்தி வருகிறார் பிரதமர் மோடி.

ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் சப்போர்ட்
மோடியின் அசைவுப்படிதான் முதல்வர் இபிஎஸ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணிகள் தமிழகத்தில் இயங்கிவருகின்றன. இருவரில் ஒருவருக்குத்தான் மோடி சப்போர்ட் தருகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இருவருக்கும் அவர் சப்போர்ட்டாக உள்ளார் என்பதையும், இருவருக்கும் அரசியல் திட்டங்கள் கொடுத்துள்ளார் என்பதையும், அண்மைக்காலத்தில் மோடி நிரூபித்துள்ளார்.

தமிழக அரசியல் லகான் மோடி கையில்
ஆளும் கட்சியாக அதிமுக, வலுவான எதிர்க்கட்சியாக திமுக என்று அரசியல் நிலைமை தமிழகத்தில் இருந்தாலும் பாஜகவை மையப்படுத்தியே தமிழக அரசியல் இயங்குகிறது. இந்தச் சூழலை அகில இந்திய பாஜக தலைமை சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. அரசியல் லகானை மோடி சரியாக சொடுக்கி வருகிறார். அதன் ஒரு பகுதிதான் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி.

ஜெ.படத்திறப்பு பின்னே ஒளிந்துள்ள தாமரை
நீண்டகாலமாக தமிழக சட்ட மன்றத்தில் பாஜக இடம்பெற வேண்டும் என்பது அக்கட்சியின் ஆசை. அதை மோடி மூலமாக இப்போது நிறைவேற்றப் போகிறது தமிழக பாஜக. ஜெயலலிதா படத் திறப்போடு மட்டும் பாஜக நிற்காது, தமிழக ஆட்சியையும் கைப்பற்ற அது திட்டமிட்டுள்ளது.

கழகங்கள் அதிர்ச்சி
நாளுக்குநாள் பாஜகவின் ஆதிக்கம் தமிழக அரசியலில் வலுத்துவரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளான திராவிட கழகங்கள் அதிர்ச்சியில் உள்ளன என்கிறாரகள் அரசியல் நோக்கர்கள். இல்லையென்றால் அவை பெரிய அளவிலான எதிர்ப்புகளை காட்டியிருக்கும். மோடியின் அரசியல் தந்திரத்துக்கு அதிமுக வெளிப்படையாக சப்போர்ட் செய்துவரும் நிலையில் திராவிட இயக்கங்கள் மாற்று அரசியலை விரைவில் கைக்கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
-
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications