செவ்வாயை நெருங்கும் மங்கள்யான்... 10 தினங்களில் இலக்கை எட்டும்!
சென்னை: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட, மங்கள்யான், தனது பயணத்தில் 95 சதவீதத்தை முடித்துள்ளது.
இன்னும் 10 தினங்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் நுழைந்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்' விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

மங்கள்யான் பயணம்
சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில் மங்கள்யான் பயணிக்கிறது. செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய அதன் பயணம் சுமுகமாகத் தொடர்ந்து வருகிறது. தற்போது பூமியில் இருந்து 2110 லடசம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்கள்யான்.

செவ்வாயை நெருங்கிய மங்கள்யான்
அதே சமயம் பூமியும் சூரியனைச் சுற்றி வேகமாய் வேறு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால் இன்று மங்கள்யான், பூமியை விட்டு 214,116,155 கி.மீ தூரத்தில் பயணிக்கிறது. இந்தத் தூரத்தால் பூமிக்கும் மங்கள்யானுக்கும் இடையில் இருவழிச் செய்திப் பரிமாற்ற நேரம் 1427.4 வினாடிகள் ஆகிறது.

10 தினங்களில் இலக்கு
இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தை வேகமாக நெருங்கும் மங்கள்யான், தனது இலக்கிலிருந்து 2,79,5582 கி.மீ தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் பத்தே தினங்களில் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் நுழைந்திருக்கும்.

40 லட்சம் கி.மீ
மங்கள்யான் விண்கலம் தனது 95 சதவீத பயணத்தை பூர்த்தி செய்து விட்டது.இன்னும் பயணம் செய்ய 40 லட்சம் கிலோமீட்டர்களே உள்ளன. தனது நிலை குறித்த பல்வேறு தொகுதிகள் அளவீடுகள் குறித்து முக்கிய தகவல்களை மங்கள்யான் அனுப்பி வைத்து உள்ளது" என்று இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது. இது தொலைக்கணிப்பு சமிக்ஞை என்று அழைக்கப்படுகிறது. இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அதன் சமூக தளத்தில் வெளியிட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications