Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் நடராஜன் உடல்- கி.வீரமணி, ஸ்டாலின், வைரமுத்து அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நடராஜன் உடலுக்கு கி.வீரமணி, ஸ்டாலின், வைரமுத்து அஞ்சலி- வீடியோ

    சென்னை: மறைந்த சசிகலா கணவர் நடராஜன் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    சசிகலா கணவர் நடராஜனுக்கு அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. பின்னர் உடல் உறுப்புதானம் பெற்று நலமடைந்தார்.

    குளோபலில் தீவிர சிகிச்சை

    குளோபலில் தீவிர சிகிச்சை

    இதையடுத்து கடந்த 16-ந் தேதி நெஞ்சக நோய் தொற்று காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் கவலைக்கிடமான நிலையில்தான் நடராஜன் இருந்தார்.

    அதிகாலையில் காலமானார்

    அதிகாலையில் காலமானார்

    மருத்துவமனையில் வைகோ, பழ.நெடுமாறன், வைரமுத்து உள்ளிட்டோர் நடராஜன் உடல்நிலையை கேட்டு வந்தனர். இன்று அதிகால 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.

    பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல்

    பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல்

    நடராஜன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு தற்போது பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. காலை காலை 7 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக நடராஜன் உடல் வைக்கப்படும்.

    பரோலில் வருகிறார் சசிகலா

    பரோலில் வருகிறார் சசிகலா

    பின்னர் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் விளாருக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வருகிறார் சசிகலா .

    வீரமணி-ஸ்டாலின் அஞ்சலி

    வீரமணி-ஸ்டாலின் அஞ்சலி

    பெசன்ட் நகரில் நடராஜன் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+