நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் தமிழகத்திலும் மதுவிலக்கு... நத்தம் விஸ்வநாதன் பேச்சு
கடலூர் : நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்திலும் மது விலக்கு கொண்டு வரப்படும் என மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் வெடித்து வருகின்றன. தீவிரமடைந்து போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையில் முடிகின்றன.

மதுவிலக்கு விவகாரம் தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மது விலக்கு குறித்து அத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார்.
கடலூரில் நடைபெற்ற அதிமுகபொது கூட்டத்தில் அவர் பேசியதாவது..
நாடு முழுவதும் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்திலும் மது விலக்கு கொண்டு வரப்படும். நாட்டில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கு கொண்டு வரப்படவில்லை.
அதே நேரத்தில் நமது மாநிலத்தில் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மது தமிழகத்தை கள்ளச்சந்தையாக மாற்றிவிடும்.
தமிழகத்தில் மது விற்பனை அரசின் விருப்பம் இன்றி தான் நடைபெற்று வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் மது நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது ஏன் தடுக்கப்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.












Click it and Unblock the Notifications