மைத்ரேயன் கூறுவது உண்மைதான்... முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சப்போர்ட்
அதிமுகவின் அணிகள் இணைந்தாலும் மனங்களை இணையவில்லை என்று மைத்ரேயன் எம்.பி. கூறியது உண்மைதான் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
திண்டுக்கல்: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டாலும் மனங்கள் இணையவில்லை என்று மைத்ரேயன் கூறியது உண்மை என்றும் ஆனால் அது காலப்போக்கில் மாறிவிடும் என்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை என்பதை போன்ற ஒரு கருத்தை மைத்ரேயன் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த கருத்தை அமைச்சர்கள் மறுத்தனர். அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் தம்பிதுரையோ மைத்ரேயன் பதிவிட்டிருந்த கருத்து அவரது சொந்த கருத்து என்றார்.
மீண்டும் மைத்ரேயன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் தான் கூறிய கருத்துகள் அனைத்தும் தம்பிதுரை கூறுவது போல் சொந்த கருத்து அல்ல என்றும் ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்து என்றும் பதிவிட்டிருந்தார். எனினும் முதல்வரும், துணை முதல்வரும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
திண்டுக்கல்லில் ஒரு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், தமிழக அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை. ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தை கூறுகின்றனர்.
மைத்ரேயனின் கருத்தில் மாற்றுக் கருத்து இல்லை. காலப்போக்கில் சரியாகிவிடும். ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்குதான் இரட்டை இலை கிடைக்கும் என்றார் நத்தம் விஸ்வநாதன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications