விஸ்வரூபமெடுக்கும் ஓபிஎஸ் அணி.. நத்தம் விஸ்வநாதனும் கைகோர்த்தார்
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இணைந்துள்ளார்.
சென்னை: சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டிக்கு எதிரான முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இணைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக, கட்சியை கைப்பற்ற அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டார் சசிகலா. இதற்கு தொடக்கம் முதலே அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எதிர்ப்பு
சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுக தொண்டர்கள் ஆதரித்தனர். அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா, முதல்வர் நாற்காலியை கபளீகரம் செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்.

ஓபிஎஸ் போர்க்கொடி
இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. சசிகலா எந்த நேரத்திலும் முதல்வராகலாம் என கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்
சசிகலாவுக்கு எதிரான ஓ. பன்னீர்செல்வத்தின் பகிரங்க அதிரடியால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நத்தம் விஸ்வநாதன்
சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தற்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்











Click it and Unblock the Notifications