தஞ்சையில் நாளை மாபெரும் மக்கள் திரள் மாநாடு - காவிரி மீட்பு குழு
தஞ்சாவூர்: தஞ்சையில் நாளை காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், மாபெரும் மக்கள் திரள் மாநாடு நடைபெறுகின்றது. தஞ்சை நாஞ்சிக் கோட்டை சாலையில் அமைந்து காவிரி திருமண மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் முழுநாள் மாநாட்டில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு உழவர் இயக்கங்களும், அரசியல் அமைப்புகளும் பங்கேற்க உள்ளன.
காலை 9.30 மணியளவில் உழவர் எழுச்சி இசையுடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன. மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் திரு. த.மணிமொழியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் . பழ.நெடுமாறன் தொடக்கவுரை நிகழ்த்துகிறார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்குகிறார்.
"காவிரி உரிமை மீட்பு" என்ற தலைப்பில் நடைபெறும் முதல் கருத்தரங்கிற்கு, கவிஞர் இரெ.திருவரசமூர்த்தி தலைமையேற்கிறார். . கோ.உதயகுமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தஞ்சை மாவட்டத் தலைவர் . எம். கணேசன், அ.சிவப்பிரகாசம், புலவர் அரங்க.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழக அரசுப் பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் . ஆர்.வி.எஸ். விசயக்குமார், முன்னாள் தலைமைப் பொறியாளரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியருமான பொறியாளர் இரெ.பரந்தாமன், குளித்தலை விவசாயிகள் நலப்பாதுகாப்புச் சங்கத் தலைவர் . அ.வா.கோபாலதேசிகன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
"வேளாண் பொருளியல்" என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாம் கருத்தரங்கிற்கு, . காவிரி தனபாலன் தலைமையேற்கிறார். . எம்.ஏ.முப்பால், . மன்னை இரா.காளிதாசு, ஐ.கலந்தர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கருத்தரங்கில், "மின்சார நெருக்கடி" என்ற தலைப்பில் தமிழ்நாடு மின்பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் பொறியாளர் சா.காந்தி, "உற்பத்திச் செலவும் விலை நிர்ணயமும்" என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்க அமைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, "சந்தைப் பாதுகாப்பு" என்ற தலைப்பில் . இரா.பொன்னம்பலம் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர்.
"வேளாண் சூழலியல் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நடைபெறும் மூன்றாம் கருத்தரங்கிற்கு, பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கத் தலைவர் . நெல் இரா.செயராமன் தலைமையேற்கிறார். ஏ.எஸ்.மோகன், வே.இராமதாசு, . சீ.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் . கி.வெங்கட்ராமன், "மரபீனி மாற்று விதைத்தடுப்பு" என்ற தலைப்பிலும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு குறித்து முனைவர் த.செயராமன் அவர்களும், "உலகமயமும் வேளாண்மைப் பாதிப்பும்" என்ற தலைப்பில் அ.அல்லீசு பாக் அவர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
காவிரி உரிமை மீட்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிகின்றனர்.
நிகழ்வான நிறைவரங்கிற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் . துரை.பாலகிருட்டிணன் தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, ம.தி.மு.க. நிர்வாகி . வி.விடுதலைவேந்தன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்கின்றனர்.
வலிவலம் மு.சேரன், . குழ.பால்ராசு, . செருமங்கலம் நடராசன், . ந.துளசி அய்யா, . ப.செகதீசன், . சி.ஆறுமுகம், வெ.துரைராசன், பொன்.வைத்தியநாதன், . அருண் மாசிலாமணி, சாமி.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பேராசிரியர் சின்னசாமி, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் . அய்யனாவரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் நிறுவனர் . குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகச் செயலர் . அரங்க.குணசேகரன், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, . கோ.தளபதி ஆகியோர் மாநாட்டு உரை நிகழ்த்துகின்றனர்.
மாநாட்டின் நிறைவாக, காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான பெ.மணியரசன் நிறைவுரை நிகழ்த்துகின்றார். . இல.செங்டிகொடிச் செல்வன் நன்றி நவில்கிறார்.
பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் இம்மாநட்டை நடத்த, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள உழவர் அமைப்புகளும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர். மாநாட்டில், காவிரி டெல்டா மாவட்ட உழவர்களின் அடுத்த கட்ட போராட்டங்களும் அறிவிக்கப்படவுள்ளதால் இம்மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications