ஸ்மார்ட் கார்டில் சினிமா பற்று! கடவுள் பற்று!... அதற்கடுத்து தேசப் பற்று...அப்பப்பா புல்லரிக்குது!!
பழனி அருகே பயனாளிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது படத்துக்கு பதிலாக தேசியக் கொடியின் படம் இடம் பெற்றுள்ளது.
பழனி: பழனி அருகே ஆயக்குடியில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் பயனாளியின் புகைப்படத்துக்கு பதிலாக தேசியக் கொடியின் படம் இடம்பெற்றுள்ளதால்
ரேஷன் பொருள்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்களாக ரேஷன் கார்டு புதிதாக வழங்கப்படாமல் உள்தாள் ஒட்டியே புதுப்பிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி படிப்படியாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலும் பெயர், முகவரி, பாலினம் உள்ளிட்ட தவறு என்று புகார் கூறப்படும். ஆனால் சமீபகாலங்களில் போட்டோவே மாறி போயுள்ளது.

ஓமலூரில் குடிகொண்ட காஜல்
சேலம் மாவட்டம் , ஒமலூரை சேர்ந்த பயனாளி சரோஜா பெரியதம்பிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தருமபுரி, போசிநாயக்கன் அள்ளியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு செருப்புக் கால் அணிந்த புகைப்படம் அச்சிடப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
Recommended Video


விநாயகர்
இதைத் தொடர்ந்து உடுமலைப்பேட்டை அருகேயுள்ள வடுகபாளைஅத்தைச் சேர்ந்தவர் நல்லசிவத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில், அவருடைய புகைப்படத்துக்கு பதிலாக விநாயகர் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தேசியக் கொடி
ஸ்மார்ட் கார்டில் சினிமா பற்று, கடவுள் பற்று இருந்த நிலையில் தற்போது தேசப் பற்றும் தொற்றிக் கொண்டது. பழனி அருகே ஆயக்குடியில் தயாசுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது படத்துக்கு பதிலாக தேசியக் கொடி இடம்பெற்றுள்ளது.

பொருள்கள் மறுப்பு
இதனால் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து ரேஷன் கடையில் உள்ளவர்களுக்கு விளக்கிக் கூறி பொருள்களை வாங்க சென்றபோது அவருக்கு பொருள்கள் மறுக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications