பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள்.. மாணவர்களுக்கு சப் கலெக்டர் அட்வைஸ்
தேவக்கோட்டை அருகே அரசு உதவிப்பெறும் நடுநிலைப் பள்ளியில் வாக்களர் தினவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பெற்றோர்களிடம் கூறி அனைவரையும
சிவகங்கை: தேவகோட்டை அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற உதவி ஆட்சியர் மாணவர்கள் பெற்றோரிடம் கூறி அனைவரையும் வாக்களிச் செய்ய வேண்டும் என்றார். கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்கபடுத்தி உறவினரை வாக்களிக்க செய்த ஆறாம் வகுப்பு மாணவியை உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பாராட்டினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட உதவி ஆட்சியர் கலந்து கொண்டார்.
தேசிய வாக்களர் தின விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார். தேவகோட்டை வட்டாச்சியர் மங்களேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து தேசிய வாக்காளர் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார்.
அனைவரையும் வாக்களிக்க சொல்ல வேண்டும்
பின்னர் உதவி ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் மாணவர்களிடம் பேசினார். அப்போது "மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அனைவரையும் வாக்களிக்க சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்
வாக்களிப்பதன் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என உதவிஆட்சியர் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு அவர் அந்தப்பள்ளியில் வாக்களிப்பதன் நோக்கத்தை எடுத்து கூறியதை நினைவு கூர்ந்தார்.
நிகழ்ச்சியின் வெற்றி - பெருமிதம்
இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் பயிலும் காயத்ரி என்ற மாணவி அவர்களது பக்கத்து வீடுகளில் எடுத்து சொல்லி இரண்டு வருடம் வாக்களிக்காத தனது உறவினரை கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்க படுத்தி வாக்களிக்க செய்ததாக ஆட்சியர் கூறினார். இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றி என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
மாணவிக்கு பாராட்டு
வாக்களிக்க ஊக்கப்படுத்திய மாணவியை சப் கலெக்டர் வெகுவாக பாராட்டினார்.இதே போன்று அனைவரும் தங்களின் வீடுகளின் அருகில் உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறி வாக்கு சதவிகித்தை அதிகபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
18வயது வந்தவுடன் வாக்களிக்க வேண்டும்
பள்ளியில் உள்ள அனைத்து மாணவ,மாணவிகளும் 18 வயது வந்த உடன் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் பாராட்டுக்குரிய மாணவி காயத்ரியை இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைக்க சொல்கிறேன் என்றும் சப் கலெக்டர் பேசினார்.
பதாகைகளுடன் ஊர்வலம்
ஊர்வலம் தேவகோட்டையில் இரவுசேரி பாதை, வைத்தியலிங்கம் தெரு,நடராஜபுரம் முதல் தெரு,செப்பவயாளர் தெரு,நேரு தெரு,சின்னம்மாரியம்மன் கோவில் தெரு,ஜெயம்கொண்டார் தெரு,மு.மா.அள.தெரு உட்பட பல்வேறு தெருக்களின் வழியாக பேரணி மீண்டும் பள்ளிக்கூடத்தை அடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். வாக்களிக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.
விழாவில் துணை தாசில்தார் சேது நம்பு, தேர்தல் பிரிவு எழுத்தர் ராஜேந்திரன்,கிராம நிருவாக அலுவலர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவாக நகராட்சி தேர்தல் பிரிவு எழுத்தர் ராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications