• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

BREAKING NEWS: வன்முறைக்கு நடுவே லாகூர் வந்திறங்கிய நவாஸ் ஷெரீப்.. ஏர்போர்ட்டில் கைது

By Shyamsundar
|

லாகூர்: ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 கோடி அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நவாஸ் ஷெரிப், மகள் மரியம், மருமகன் சப்தார், இவர்களின் மகன்கள் ஹசன், ஹூசைன் ஆகியோரும் நீதிமன்றத்தால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மரியத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனைவியின் புற்றுநோய், சிகிச்சைக்காக லண்டனில் தங்கியிருந்த நவாஸ் ஷெரிப் மற்றும் மகள் மரியம் ஆகியோர் அபுதாபி வழியாக லாகூருக்கு இன்று மாலை வருகிறார்கள். முன்னதாக பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் அபுதாபிக்கே சென்று நவாஸுடன் லாகூருக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தனர். ஆனால் லாகூரில் நவாஸ் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே விமானம் அப்படியே இஸ்லாமாபாத்துக்கு திருப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல்களை பொய்யாக்கி, தந்தையும் மகளும் லாகூர் வந்து சேர்ந்துள்ளனர். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு அவர்கள் லாகூர் வந்தனர். அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Newest First Oldest First
8:48 PM, 13 Jul
பாக். தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு வெடிப்பு

குண்டுவெடிப்பில் 70 பேர் பலி

8:43 PM, 13 Jul
லாகூரில் வன்முறை வெடித்ததால் நவாஸ் விமானம் திருப்பிவிடப்பட்டது

லாகூருக்கு பதில் இஸ்லாமாபாத்திற்கு நவாஸ் விமானம் திருப்பிவிடப்பட்டது

8:39 PM, 13 Jul
நவாஸ் ஷெரீப்பை கைது செய்வதை எதிர்த்து அவர் கட்சியினர் பாக்.கில் ஆர்ப்பாட்டம்

லாகூரில் போராட்டம் நடத்திய ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

6:45 PM, 13 Jul
சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை பெய்கிறது

குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்கிறது

விடாமல் மழை பெய்வதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

தொடர் மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சி

4 நாட்களாக தினசரி மாலையில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது

6:26 PM, 13 Jul
சென்னையில் இன்றும் மழை

லேசான தூரல், காற்றுடன் பரவலாக மழை

6:21 PM, 13 Jul
நவாஸ் ஷெரீப் கைது செய்யப்படுவதையடுத்து பாகிஸ்தான் பலத்த பாதுகாப்பு

லாகூரில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்

நவாஸ் ஷெரீப் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் கைது

லாகூர் விமான நிலையத்தில் இருந்து ஷெரிப்பை ஹெலிகாப்டரில் சிறைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு

5:34 PM, 13 Jul
ஊழலை ஒழிக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் - கமல்ஹாசன்
5:33 PM, 13 Jul
ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்-கமல்ஹாசன் பேட்டி

சட்டசபை-நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கூடாது- கமல்ஹாசன்

5:23 PM, 13 Jul
பாகிஸ்தான் எதிர்காலத்திற்காக தியாகம் செய்கிறேன்- நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் தேர்தல் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை-நவாஸ் ஷெரீப் பேட்டி

5:22 PM, 13 Jul
இந்தியாவில் அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் ஜூலை 27, 28ல் ஏற்படுகிறது

1 மணி நேரம் 43 நிமிடங்கள் சந்திர கிரகணம் நீடிக்கும் - புவியியல் அமைச்சகம்

இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மொத்த சந்திர கிரகணங்களின் நேரத்தைவிட இது அதிகம்

5:15 PM, 13 Jul
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ மனு

டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு

4:28 PM, 13 Jul
பாக். முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப்பை கைது செய்ய ஆயத்தம் தீவிரம்

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார் நவாஷ் ஷெரிப்

ஷெரிப் தனது மகள் மரியத்துடன் இன்று லாகூர் திரும்பும்போது கைது செய்யப்படுகிறார்கள்

4:19 PM, 13 Jul
மேட்டூர் அணை நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

அணைக்கு விநாடிக்கு 43,000 கன அடி நீர் வருகிறது

கபிணியிலிருந்து கூடுதல் நீர் திறப்பு எதிரொலி

4:19 PM, 13 Jul
கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி உடல் தகனம்

பேரிடர் பயிற்சியின்போது அடிபட்டு இறந்தார் லோகேஸ்வரி

3:18 PM, 13 Jul
பேரிடர் மேலாண்மை பற்றி முறையாக அவர் பயிற்சி பெறவில்லை

ஆறுமுகம் பணி செய்ய அளித்த ஆவணங்கள் எல்லாம் போலி

ஆறுமுகத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது

3:18 PM, 13 Jul
கோவை மாணவியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம் என்டிஎம்ஏ பயிற்சியாளர் இல்லை

கைதான ஆறுமுகம் மத்திய மாநில அரசின் ஊழியர் கிடையாது

மாற்றுத்திறனாளி ஆறுமுகம் எப்படி பயிற்சியாளர் ஆனார் என்று விசாரணை

3:12 PM, 13 Jul
தியேட்டர்களுக்கு வெளி உணவுகளை எடுத்து செல்லலாம்: மகாராஷ்டிரா அரசு

பிவிஆர் உள்ளிட்ட மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும் விதிமுறை பொருந்தும்

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய உத்தரவு அமலுக்கு வருகிறது

உணவு பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்காவிட்டால் நடவடிக்கை-அரசு

2:39 PM, 13 Jul
பேரிடர் பயிற்சியில் கோவை மாணவி இறந்தது தொடர்பாக விசாரிக்க 2 தனிப்படை அமைப்பு

2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைப்பு: பேரூர் டிஎஸ்பி வேல்முருகன் தகவல்

2:15 PM, 13 Jul
கோவையில் பலியான மாணவி லோகேஷ்வரி உடலுக்கு பிரேத பரிசோதனை முடிந்தது

மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

2:14 PM, 13 Jul
தமிழகத்தில் மீன்களில் ரசாயன கலப்பு இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்

மீன்களில் ரசாயன கலப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பார்மலின் போன்ற எந்த ரசாயனமும் மீன்களில் கலக்கப்படவில்லை

மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

யாரும் மீனவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்

மீன் மிகவும் நல்ல ஆரோக்கியமான உணவு - அமைச்சர் ஜெயக்குமார்

2:02 PM, 13 Jul
தமிழக மீனவர்கள் மீது ஆந்திர மீனவர்கள் தாக்குதல்

தாக்குதலில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள் காயம்

1:41 PM, 13 Jul
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோவில் நேரில் விசாரணை

நேரில் விசாரணை நடத்துகிறது ஆறுமுகசாமி ஆணையம்

29ம் தேதி நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

1:33 PM, 13 Jul
கோவை கல்லூரியில் மரணமடைந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்

நிவாரணத் தொகை அறிவித்தது தமிழக அரசு

11:33 AM, 13 Jul
கோவையில் நடந்த பேரிடர் பயிற்சிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - பேரிடர் ஆணையம்

கோவை மாணவி பலியானது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்

மாணவி பலியானது வருத்தமளிக்கிறது - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

பயிற்சி அளித்தவர் எங்கள் ஆணையத்தை சேர்ந்தவர் இல்லை

அவர் எங்களிடம் பயிற்சி பெறவே இல்லை - பேரிடர் மேலாண்மை ஆணையம்

10:53 AM, 13 Jul
நிர்மலாதேவி மீது விருதுநகர் கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது

பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

விபச்சாரத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு

10:43 AM, 13 Jul
கோவை மாணவி பலி: முதல்வருடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை

கல்லூரி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கே.பி.அன்பழகன் ஆலோசனை

பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி லோகேஸ்வரி பலி

10:18 AM, 13 Jul
காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியது

கபினியிலிருந்து 46 ஆயிரத்து 250 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது

10 மாதத்திற்கு பின் மேட்டூரில் நீர்மட்டம் 75 அடியை எட்டியுள்ளது

9:58 AM, 13 Jul
கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சி தந்தவர் தனியார் அமைப்பின் பயிற்சியாளர்

கோவையில் மாணவியின் மரணத்திற்கு காரணமான பயிற்சியாளர் கைது

பயிற்சியாளர் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்தவர் இல்லை

மாணவி இறந்ததை அடுத்து தனியார் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

9:29 AM, 13 Jul
உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வீட்டில் தீவிபத்து

சென்னை கிரீன்வேஸ் சாலையில் நீதிபதி வீட்டில் தீ விபத்து

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்களா அருகே நீதிபதி வீடு உள்ளது

9:13 AM, 13 Jul
தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல் ஏன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி கொடியேற்றம் செய்தார்? தமிழிசை

தன்னை பகுத்தறிவுவாதி என கூறிக்கொண்டு கமல் வேஷம் போட வேண்டாம் - தமிழிசை

READ MORE

English summary
The Commission of Inquiry looking into the death of Jayalalithaa has ordered an inspection of the facilities used by the former CM and V.K. Sasikala at the Apollo Hospital on Greams Road. The visit is to take place on July 29, between 7 - 7.45 pm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X