வருடங்கள் ஓடினாலும்... இன்னும் மனசை வசீகரிக்கும் நயனதாரா... என்ன காரணம்??

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயனதாரா.. ஓவியமா.. தேவதையா.. பிரம்மனே சற்றுக் குழம்பிப் போயிருப்பான்... இவரைப் படைத்து முடித்த போது...

அழகு கொப்பளிக்கும் கண்கள்.. அம்சம் பொங்கும் சிரிப்பு...கண்ணைப் பறிக்கும் அழகு.. பேசாமல் பேசும் பேரழகு..

வருடம் இத்தனை ஓடியும் இன்னும் மாறாத கிரேஸ்... நயனதாராவுக்கு இன்னும் ஏன் இத்தனை மவுசு.. ?

ஐயாவில் ஆரம்பித்த அவரது அழகு ஓட்டம் முடியாத மராத்தானாக ஓடக் காரணம் ஒன்றா இரண்டா.. ஓராயிரம்...!

60 வயது ரஜினியாக இருந்தாலும் சரி, 30 வயது விஷாலாக இருந்தாலும்.. ஈடு கொடுத்து இணை போடும் அரிய நாயகி இந்த நயனதாரா

சின்ன வயசு ஹீரோவாக இருந்தாலும்.. சிறக்க வைக்கும் நடிப்பையும், சிலிர்க்க வைக்கும் நடனத்தையும் இணைத்துத் தரும் அருமை நடிகை...

அமைதி நாயகன் அஜீத்துடனும் அட்டகாச ஜோடியாக அவர் போட்ட ஆட்டம் ஏகனில்... இந்தக் காதல் காட்சியில் நயனதாராவை பார்த்து மெய் மறக்காதவர் இருக்க முடியுமா...

துள்ளல் இசையும், கூடவே பின்னல் சிரிப்பும் சேரும்போது, சிவகாசி பட்டாசாக பொறிந்து தள்ளி விடுவார் நயனதாரா டான்ஸில்... விஜய்யுடன் இவர் போட்ட ஆட்டம் ரசிகர்களுக்கு மாஸ் தீபாவளி...

கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்.. கொஞ்சிப் பேசக் கூடாதா.. ஆஹாஹா.. சேலையிலும் வனப்பை வாரி வழங்கும் வள்ளல் அழகிகளில் நயனதாராவுக்கு ஈடு இணையே இல்லை...

கண்ணில் ஒரழகு.. கையில் நூறழகு.. உன்னால் பூமி அழகே... இன்னும் ஒரு பத்து ஆண்டுகளானாலும் கூட இந்த தாராவின் அழகு நம்மை ஈர்த்துப் பிடித்தபடிதான் இருக்கும் போல...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+