தமிழக அரசியல் தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு பவார் கட்சி பிரச்சாரம்
சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்கிரஸை திமுக கழட்டிவிட்ட பின்பு அந்த கட்சியை பலரும் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் ராஜேஸ்வரன், தமிழ்நாடு இளைஞரணி மாநில தலைவர் ஆர்.எஸ். செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து தமிழகம் முழுக்க போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்களாம்.
ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி குடும்ப சொத்து பட்டியல் அதிமுக ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டிவியிலும், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சொத்து பட்டியல் திமுக ஆதரவு தொலைக்காட்சியான கலைஞர் டிவியிலும் வெளிவந்து பலரது தூக்கத்தை கெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றது.
இது குறித்து அக்கட்சியின் தமிழக இளைஞரணி மாநில தலைவர் ஆர்.எஸ் செந்தில்குமாரிடம் கேட்டபோது,
என்ன சார் இப்படி கேட்டுவிட்டீங்க.. தமிழகத்தில் மின் வெட்டு, கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, அதிக அளவு விபத்து, வேலை இல்லா திண்டாட்டம், விலை வாசி உயர்வு, தண்ணீர் வசதி இல்லாமை, சாலை வசதி இல்லாமை என எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு. அதை முன் வைத்து தான் தேர்தல் பிரச்சாம் செய்ய உள்ளோம்.
அது மட்டும் இல்ல. மற்றவர்களை விட எங்க பிரச்சாரம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். பொருத்து இருந்து பாருங்க என்றவர், தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்களின் சொத்து விவரத்தை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடப் போகின்றோம். அதில் பலரின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறப்போகின்றது என சஸ்பெண்ஸ் வைத்தார்.
இந்த நிலையில் செந்தில் குமார் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என பல அரசியல் கட்சி தலைவர்கள் தூதுவர்கள் மூலம் வேவு பார்த்து, நீஙக நல்லா இருப்பீங்களா ராசா, தயவு செய்து அந்த பட்டியலில் எனது பெயர் இருந்தால் எடுத்துவிடுங்க என கொஞ்சல் போன்களும், அதை எப்படி வெளியிடுவீங்க என மிரட்டல் போன்களும் வருகின்றதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications