பாமகவுக்கான கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன... அதுக்குதான் தமிழிசையின் இந்த பேட்டியே!!
கோவை: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக முதல்வர் வேட்பாளரை ஒருபோதும் அறிவிக்கவே மாட்டோம் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலைப் போல தமிழக சட்டசபை தேர்தலிலும் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகின. மேலும் இக்கூட்டணி எந்த கட்சி தலைமையில் அமையும்? யார் முதல்வர் வேட்பாளர்? ஆகியவற்றில்தான் சிக்கல் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பாமகவோ எங்கள் தலைமையில்தான் கூட்டணி; அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என விளக்கம் அளித்துவிட்டது. தேமுதிக தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஊழலற்ற கட்சிகளைத்தான் சேர்ப்போம். எங்கள் கூட்டணியின் சார்பாக முதல்வர் வேட்பாளரை ஒருபோதும் அறிவிக்க மாட்டோம்.
வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியால் வெல்லவும் முடியாது; நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசவும் முடியாது என்றார்.
முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவித்து தங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாமக வருவதை ஏன் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் பாமகவுக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும்தான் தமிழிசை இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications