ஜெ. போயஸ் தோட்டத்துக்கு வெளியே என்.டி.டி.வி செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர்!
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலவரத்தை அவரது சென்னை போயஸ் தோட்டம் வீட்டில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த என்.டி.டிவி செய்தியாளர்களை அதிமுகவினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
சென்னையில் நேற்று போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீடு முன்பு காலை முதலே அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அதைப் போலவே டிவி மீடியாக்களின் ஓபி வேன்களும் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்தன.
காலையில் அதிமுகவினர் வெற்றி களிப்புடன் பட்டாசுகள், இனிப்புகளை வாங்கி வைத்திருந்தனர். அப்போது தீர்ப்பு நேரம் ஒத்திவைக்கப்பட்டதை புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதாகக் கருதி பட்டாசுகளை வெடித்தனர் அதிமுகவினர்..
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I &. <a href="https://twitter.com/ndtv">@ndtv</a> crew attacked outside Poes Garden this evening for reporting that <a href="https://twitter.com/hashtag/Jayalalithaa?src=hash">#Jayalalithaa</a> was going to jail & discussing possible successor</p>— Uma Sudhir (@umasudhir) <a href="https://twitter.com/umasudhir/status/515928707416866816">September 27, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அதன் பின்னர் நேரம் நேரம் போகப் போக... ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட கொந்தளித்துப் போயினர் அதிமுகவினர்.. செய்தியாளர்களும் அங்கிருந்தபடியே டிவிக்களுக்கு நேரடியாக கள நிலவரத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது என்.டி.டி.வி செய்தியாளர் உமாசுதிர், ஜெயலலிதா ஜெயிலுக்குப் போகிறார் என்று கூறி அவருக்கு பதில் யார் அடுத்த முதல்வர் என்ற விவாதம் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தார்..
"ஜெயலலிதா ஜெயில்" என்ற வார்த்தைகளைக் கேட்டு கொந்தளித்துப் போன அதிமுகவினர் அந்த செய்தியாளரை சூழ்ந்து கொண்டு கேமிராக்களை பறிமுதல் செய்ய முயற்சித்ததுடன் அவர்களைத் தாக்கியிருக்கின்றனர். இதில் என்.டி.டி.வி ஒளிப்பதிவு உபகரணங்கள், ஓபி வேன் தாக்கப்பட்டுள்ளது.
அதிலும் பெண் நிருபர் என்பதாலோ என்னவோ அவரை சில பெண்களை விட்டு தாக்கினர் அதிமுகவினர். அடடா, என்ன ஒரு நேர்மை!
இதையடுத்து சக பத்திரிகையாளர்கள் என்.டி.டி.வி செய்தியாளர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல பதற்றம் ஏற்பட்டுவிட்டது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications