நெடுவாசல் மக்களுக்கு மாநில அரசு மீது நம்பிக்கையில்லை - ஸ்டாலின்
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் போராடி வரும் மக்களுக்கு தமிழக அரசு மீது நம்பிக்கையில்லை என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மாநில அரசு மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே நெடுவாசல் மீது மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மாநிலம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
அரசியல் கட்சித்தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். களத்திற்கே நேரடியாக சென்று பேசி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
முதல்வருடன் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தைக் கைவிடுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்தார். ஆனாலும் போராட்டம் நீடித்து வருகிறது.

ஸ்டாலின்
இந்த நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நெடுவாசல் செல்வதற்காக திருச்சி சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில அரசு உறுதிமொழி அளித்தும் அதை ஏற்க மக்கள் மறுத்து விட்டனர்.

அரசு மீது நம்பிக்கையில்லை
நெடுவாசல் மக்களுக்கு இந்த மாநில அரசு கொடுத்த உறுதி மொழியின் மீது நம்பிக்கையில்லை. எனவேதான் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருவதாக கேள்விப்பட்டேன். இந்த அரசு வாய்மொழியாக கொடுக்கும் உத்தரவு ஏற்க முடியாது என்று மக்கள் கூறி வருகின்றனர்.

மத்திய அரசு
மத்திய அரசு எழுத்துபூர்வ உறுதி மொழி அளித்தால் மட்டுமே நெடுவாசலில் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க மாநில அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

போலீஸ் குவிப்பு
நெடுவாசலில் இன்று அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வந்து கொண்டுள்ளனர். ஸ்டாலின் வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications