எடப்பாடியார் எத்தனை நாளைக்கு முதல்வரா இருப்பார்.. இவரை நம்பி நெடுவாசல் போராட்டத்தை எப்படி கைவிடுவது?
தமிழக முதல்வர் எத்தனை நாளைக்கு முதல்வராக இருப்பார்? அவருடைய பேச்சை நம்பி எப்படி போராட்டத்தை கைவிடுவது என்று நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது; போராட்டத்தை கைவிடுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்க முடியாது என்று நெடுவாசல் போராட்டக்காரர் கூறியுள்ளனர்.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் 14வது நாளாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

எப்படி நம்புவது?
எடப்பாடி பழனிசாமி எத்தனை நாட்களுக்கு முதல்வராக இருப்பார் என்று தெரியாத நிலையில், அவரது பேச்சை நாங்கள் எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பி, முதல்வர் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளனர் நெடுவாசல் மக்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு
மத்திய அரசுதான் இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, மத்திய அரசிடம் இருந்து முறைப்படி ரத்து அறிவிப்பு வந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் உறுதியாக கூறியுள்ளனர்.

உயிர் போனாலும்...
முறைப்படியான அறிவிப்பு வெளிவராமல் போராட்டத்தை கைவிட முடியாது என்று கூறியுள்ள மக்கள், குஜராத்தில் பிரதமர் மோடியும், கொங்கு மண்டலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த திட்டத்தை தொடங்கி கொள்ளட்டும் என்றும் உயிர் போனாலும் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறினர்.

15வது நாளாக..
இதனையடுத்து, 15வது நாளாக நாளையும் இந்தப் போராட்டம் தொடர உள்ளது. இரவும் பகலும் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications