Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நுங்கம்பாக்கத்தில் 100 பேர் தங்க இடம், 1000 பேருக்கு உணவு உள்ளது: தொடர்புக்கு 7092020207

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 75 முதல் 100 பேர் தங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது, உதவிக்கு 7092020207 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கபாலி ரஜினி என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதே போன்று பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.

கடந்த மாதம் கொட்டித் தீர்த்த மழையால் படாதபாடு பட்ட சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது நேற்று முன்தினம் இரவில் இருந்து பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன.

சென்னையின் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில் உதவி தேவைப்படுபவர்களுக்காக சிலர் ட்வீட் செய்துள்ளனர்.

நுங்கம்பாக்கம்

75 முதல் 100 பேர் தங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் தொடர் எண் 7092020207 #ChennaiRainsHelp #chennairains என்று கபால் ரஜினி ட்வீட் செய்துள்ளார்.

உணவு

உணவுக்கு - தொடர்பு கொள்க Ph : 9841745122

இடம் - தாம்பரம் - குரோம்பேட்டை - பல்லாவரம் - பம்மல் - பொளிச்சூர் ஈசி ஆர் / ஒம் ஆர் என சிவா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

போரூர்

போரூர், பூந்தமல்லி, அய்யப்பன் தாங்கல் பகுதிகளில் தங்குமிடம், உதவி தொடர்புகொள்ளவும்:
சுகி - 9962679191
சித் - 8939368220 என முகமது முஸ்தாக் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

வேளச்சேரி

#chennairains வேளச்சேரியில் 50 பேர் தங்கும் இடம் உள்ளது. தொடர்புக்கு 9790310802 #chennairainhelp என விஜய் ட்வீட் செய்துள்ளார்.

தண்டையார்பேட்டை

தண்டையார்பேட்டை அருகே பாதிகப்பட்ட மக்கள் கவனத்திற்கு: 100 பேர் தங்கும் பிரின்ஸ் பிளாட்ஸ் உள்ளது. தொடர்புக்கு சேத்தன்- 9840191291 என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மருந்து

#ChennaiFloods மருந்து மற்றும் குடிநீருக்கு 0446555552 - 8939022249 ஆகிய எண்களை தொடர்பு கொள்க என்கிறார் ரோஹித் ஜோஷி.

ஆழ்வார்பேட்டை

ஆழ்வார்பேட்டையில் உள்ள என் இடத்தில் 10 முதல் 15 பேரை தங்க வைக்க முடியும். இதை தயவு செய்து பகிருங்கள். தொடர்புக்கு: ரவி 9003233127 என்று தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

மைலாப்பூர்

விகர்னனை 9600045263 என்ற எண்ணில் தொடர்பு கொள்க. 5 பேர் தங்க இடமும், உணவும் உள்ளது. மைலாப்பூரில் உள்ள இல்லூஷன்ஸ் பப் அருகே இடம் உள்ளது என்று முஸ்தாக் கூறியுள்ளார்.

இடம்

@Appuwits தங்க இடம் உள்ளது, அவசர உதவி எண்கள் http://chennairainshelp.in இணையதளத்தில் உள்ளது. இந்த தகவலை பகிரவும் என ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

உதவி

சென்னையில் உதவி வேண்டுபவர்கள் யாரை தொடர்பு கொள்வது என்று ஒரு இணைப்பை வெளியிட்டுள்ளார் அருள்மொழி.

வாகனங்கள்

யாரிடமாவது கூடுதலாக இன்னோவா அல்லது ஸ்கார்பியோ கார்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். மேலும் பல வாகனங்கள் தேவைப்படுகிறது என்று நடிகர் சித்தார்த்த ட்வீட் செய்துள்ளார். வேளச்சேரி 2வது மெயின் ரோட்டில் கர்ப்பிணிக்கு உதவி தேவைப்படுகிறது. தொடர்புக்கு 9940725055 என்ற எண்ணை அளித்து சித்தார்த்தின் பெயரோடு அஜீத் என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

பேருந்து

பேருந்து

சென்னையில் சிக்கிக் கொண்டு திருச்சி அல்லது திண்டுக்கல் செல்ல விரும்புவோருக்காக லட்சுமி நாராயண் ட்ராவல்ஸ் இன்று ஒரு பேருந்தை இலவசமாக இயக்குகிறது. பேருந்து இன்று மாலை 6 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து புறப்படும். இது குறித்து மேலும் விபரம் அறிய 9360910101, 9884580088 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

இலங்கை

இலங்கை விமான நிலையத்தில் 2000 பேர் சிக்கித் தவிக்கிறார்கள். சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 15 விமானங்கள் ரத்து, 10 விமானங்கள் பெங்களூர், மதுரை, திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

மாணவிகள்

9677123786 காரப்பாக்கம் கல்லூரி பெண்கள் விடுதியில் 40 மாணவிகள் சிக்கி தவிப்பு
.
#chennairains தயவு செய்து உதவி செய்யுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+