சிறுவனின் வாயில் துப்பாக்கியால் சுட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சென்னை: நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதில் குண்டு பாய்ந்த சிறுவனுக்கு தொண்டையில் ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. சிறுவனை மிரட்டிய இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி மகாத்மாகாந்தி நகரில் திங்களன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை இரவில் 16 வயது சிறுவன் ஒருவனை அழைத்து வந்தனர். அவனிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சிறுவனின் வாயில் வைத்து மிரட்டினார். அப்போது துப்பாக்கி வெடித்து சிறுவனின் தொண்டையில் பட்டு வெளியேறியது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தான். இதனால் நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டையில் ஆபரேசன்
உடனடியாக இன்ஸ் பெக்டர் புஷ்பராஜ் மற்றம் போலீசாருடன் சேர்ந்து அவனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். இதனையடுத்து சிறுவனுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் சிறுவன் உயிர் தப்பினான்.
சாலை மறியல்
இச்சம்பவத்தை கண்டித்தும், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று இரவு வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் இந்திரஜித் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாட்சியர் , பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும், எனவே இன்ஸ்பெக்டர் புஷ்பராஜை பணியிடை நீக்கம் செய்யலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications