நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை.. கயிறு+சேர் உடன் ஹாஸ்டலுக்கு போன சிசிடிவி காட்சி.. ஷாக்
சேலம் : சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சந்துரு என்ற மாணவன், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர் சந்துரு, கயிறு மற்றும் நாற்காலியுடன் அறைக்குள் நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நீட் மாணவர் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்ற 19 வயது மாணவன் சேலம் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடுதி வார்டன் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்துகொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பதற்றம்
மாணவன் தற்கொலை செய்துகொண்ட நீட் பயிற்சி மையம் உள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர் தற்கொலை குறித்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை நடத்துகிறார். ஆத்தூர் டிஎஸ்பி நாகராஜனும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மூன்றாவது முறையாக
தற்கொலை செய்துகொண்ட மாணவன் சந்துரு, ஏற்கனவே 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி வந்த சந்துரு, திடீரென இன்று தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடியாத விரக்தியில் சந்துரு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நைலான் கயிறு + சேர்
தற்கொலை செய்து கொள்வதற்காக மாணவன் சந்துரு, கயிறு, நாற்காலி உள்ளிட்டவற்றுடன் பயிற்சி மையத்தின் விடுதி அறைக்கு வந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சி பதிவைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications