தேசிய அளவில் தேர்வு நடத்த தகுதியற்ற சிபிஎஸ்இ.. சாட்டையை சுழற்றிய மதுரை ஹைகோர்ட் கிளை
நீட் தேர்வில் குளறுபடி காரணமாக தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது அம்பலமானதன் மூலம், சிபிஎஸ்இ அமைப்பு, தேசிய அளவில் தகுதித் தேர்வை நடந்த தகுதியற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மதுரை: நீட் தேர்வில் குளறுபடி காரணமாக தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது அம்பலமானதன் மூலம், சிபிஎஸ்இ அமைப்பு, தேசிய அளவில் தகுதித் தேர்வை நடந்த தகுதியற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இதனால் தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். அதில்தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

மதிப்பெண்
49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். மேலும் புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும்.

சாட்டை
இதில் முறையற்று செயல்பட்ட சிபிஎஸ்இ அமைப்பிற்கு கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் சிபிஎஸ்இ தரப்பை ஹைகோர்ட் கிளை கண்டித்து இருந்தது. அதேபோல் சிபிஎஸ்இ பெரிய அளவில் சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட விரும்புகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.

முழுக்க முழுக்க தவறு
கொஞ்சம் கூட கேள்வித்தாள் அறிவு இல்லாத நபர்களை தேர்வு செய்து, மனம்போன போக்கில் தமிழில் மொழிபெயர்த்து நீட் தேர்வு நடத்தி இருக்கிறார்கள். இது மாணவர்களுக்கு பெரிய கஷ்டத்தை கொடுத்துள்ளது. நீட் தேர்வின் போது மாணவர்களை மோசமாக நடத்திய சிபிஎஸ்இ, அவர்கள் பங்கிற்கு எந்த இடத்திலும் பொறுப்பாக செயல்படாமல், கொஞ்சம் கூட திட்டமிடல் இன்றி செயல்பட்டு இருக்கிறார்கள்.

திறமையில்லை
வேறு மாநிலங்களில் தேர்வு அறை ஒதுக்கி, தேர்வு நாளில் மாணவர்களை கொடுமைப்படுத்திய மத்திய அரசும், சிபிஎஸ்இ அமைப்பும் இந்த தீர்ப்பு காரணமாக தோல்வி அடைந்துள்ளது. முக்கியமாக சிபிஎஸ்இ அமைப்பு, தேசிய அளவில் தகுதித் தேர்வை நடத்த தகுதியற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுரை ஹைகோர்ட் தனது தீர்ப்பின் மூலம் சாட்டையை சுழற்றி இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications