சிபிஎஸ்இயின் அடாவடிதனத்தால் நடந்த கொடூரம்.. அப்பா இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிய மகன்!
நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்ற நபர் மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதினார். தேர்வு முடியும் வரை இந்த செய்தி அந்த மாணவனிடம் தெரிவிக்கப்படவில்லை.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அனிதா உயிரை பலி வாங்கிய அதே நீட் தற்போது இன்னொரு உயிரையும் பலி வாங்கியுள்ளது. இந்தமுறை தந்தை ஒருவரின் உயிரை பலி கேட்டு இருக்கிறது மத்திய அரசின் இந்த நீட். நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனுடன் கேரளாவின் எர்ணாகுளம் சென்ற இவர், மகனை தேர்வு அறைக்கு அனுப்பிவிட்டு, ஹோட்டலில் தங்கி இருக்கிறார். இரவு முழுக்க பயணம் செய்து, மகனுடன் காலையில் தூங்காமல், தேர்வு அறையை கண்டுபிடித்த அலைச்சலில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இந்த தகவல் உள்ளே தேர்வெழுதிக் கொண்டு இருந்த அவரின் மகன், கஸ்தூரி மகாலிங்கத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. கஸ்தூரி மகாலிங்கம் தன் தந்தை இறந்தது தெரியாமல் தேர்வெழுதினார். தேர்வு நடக்கும் வளாகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் அவருக்கு அப்போது தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அனிதாவின் உயிரை வாங்கிய போதே நீட் வேண்டாம் வேண்டாம் என்ற தமிழகம் கொந்தளித்தது, இப்போது இன்னொரு உயிரை இது குடித்துள்ளது. சிபிஎஸ்இ செய்த அடாவடி தனத்தால் இத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications