தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவர் பலி... நீச்சல் தெரியாததால் விபரீதம்
நெல்லை: நீச்சல் தெரியாத மாணவர் ஒருவர் தாமிரபரணி ஆற்றின் ஆழப்பகுதிக்கு சென்று குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை அடுத்துள்ளது பேட்டை. அங்குள்ள துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் குமார். இவர் தனது நண்பர் சதீஷ் மற்றும் விக்னேஷூடன் அறிவியல் மையத்தை சுற்றி பார்த்து விட்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலத்தின் கீழ் குளிக்க சென்றனர்.
ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்ற சதீஷ்குமார், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். நண்பன் நீரில் மூழ்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற இரு மாணவர்களும் கரைக்கு வந்து அக்கம் பக்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வெட்டும் பெருமாள் தலைமையில் வீரர்கள் வந்து சதிஷ்குமாரை தேடும் பணியில் ஈடு பட்டனர். இறுதியில் சதீஷ்குமாரின் சடலத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சதிஷ்குமாரின் பெற்றோர் மகன் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
தாமிரபரணி ஆற்றில் ஒரு சில பகுதிகள் மிகவும் ஆபத்தானவை. ஆழம் தெரியாமல் குளிப்பவர்கள் ஆற்றில் மூழ்கி இறப்பதால் ஆழமான அந்தந்த பகுதிகளில் காவல் துறை சார்பில எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பா சுலோச்சனா முதலியார் ஆற்று பாலத்தின் கீழ் 97ம ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலையை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் மூழ்கி இறந்தனர். அந்த இடத்திலு்ம் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications